Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை – வானிலை ஆய்வு மையம் தகவல்

Webdunia
வெள்ளி, 5 ஜூன் 2020 (12:46 IST)
வங்க கடலில் உருவான அம்பன் புயல் கடந்த வாரத்தில் கரையை கடந்த நிலையில் தற்போது புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு வங்க கடலில் அந்தமான் அருகே உருவான காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாறியது. அம்பன் என பெயரிடப்பட்ட அந்த புயல் சூப்பர் புயலாக மாறி மேற்கு வங்கம் மற்றும் வங்கதேசம் இடையே கரையை கடந்தது. இதனால் மேற்கு வங்கத்தில் பல்வேறு உயிர்சேதங்களும், பொருட் சேதங்களும் ஏற்பட்டது.

புயலால் ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து இன்னும் மீளாத சூழலில் தற்போது வங்கக்கடலில் மீண்டும் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழக கடற்கரையோர மாவட்டங்களில்  சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments