Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடியுரிமை சட்டம்: ரஜினி கருத்துக்கு நெட்டிசன்களின் பதிலடி

Webdunia
வெள்ளி, 20 டிசம்பர் 2019 (09:58 IST)
குடியுரிமை சட்டத் திருத்தம் குறித்து ரஜினி பதிவு செய்த டுவிட்டுக்கு உதயநிதி ஸ்டாலின், சீமான் உள்பட ஒரு சில அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்ததற்கு நெட்டிசன்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர் 
 
எந்த ஒரு பிரச்சினைக்கும் தீர்வு காண வன்முறை மற்றும் கலவரம் ஒரு வழி ஆகிவிடக் கூடாது என்றும் தேசப்பாதுகாப்பு மற்றும் நாட்டு நலனை மனதில் கொண்டு இந்திய மக்கள் எல்லோரும் ஒற்றுமையுடனும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றும் இப்பொழுது நடந்துகொண்டிருக்கும் வன்முறைகள் என் மனதிற்கு வேதனை அளிக்கிறது என்றும் ரஜினி கூறியிருந்தார் 
 
ரஜினி கூறிய இந்த கருத்திற்கு வழக்கம்போல் அரசியல் தலைவர்கள் அதனை திரித்துக் கூறி கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டரில் ரஜினியை நேரடியாக கூறாமல் மறைமுகமாக தாக்கி ஒரு டுவிட்டை பதிவு செய்துள்ளார். 
 
இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ரஜினிக்கு எதிராக கருத்து கூறும் அரசியல்வாதிகளுக்கு நெட்டிசன்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். குடியுரிமை சட்டம் என்ற பெயரால் வன்முறையை கிளறி விட்டு அதன் மூலம் குளிர்காய்ந்து ஓட்டு அரசியல் செய்து வரும் அரசியல்வாதிகளுக்கு சவுக்கடி கொடுக்கும் வகையில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதலமைச்சரே பாராட்டிய தமிழ்நாட்டின் ஏரி மனிதன்! யார் இந்த நிமல் ராகவன்?

மீனவர்கள் பிரச்சினை! கச்சத்தீவை மீட்பதுதான் ஒரே வழி! - புதிய நடவடிக்கையை கையில் எடுக்கும் மு.க.ஸ்டாலின்?

நித்யானந்தா உயிருடன் தான் இருக்கிறார்.. வதந்தியை நம்ப வேண்டாம்.. கைலாசா நாடு அறிவிப்பு..!

இ-பாஸ் நடைமுறைக்கு எதிர்ப்பு.. இன்று நீலகிரியில் கடையடைப்பு போராட்டம்..!

பிரதமர் மோடி வருகை எதிரொலி: ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்க தடை..!

அடுத்த கட்டுரையில்
Show comments