Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஸ்தம்பித்தது டெல்லி!! சாலைகளில் தேங்கி நிற்கும் வாகனங்கள்...

ஸ்தம்பித்தது டெல்லி!! சாலைகளில் தேங்கி நிற்கும் வாகனங்கள்...
, வியாழன், 19 டிசம்பர் 2019 (15:41 IST)
டெல்லியில் குரியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டம் காரணமாக சாலைகள் முடக்கப்பட்டு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. 
 
சமீபத்தில் இந்திய குடியுரிமைச் சட்ட திருத்தம் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. மத்திய அரசு நிறைவேற்றிய குடியுரிமை சட்டத்திற்கு எதிராக மாணவர்கள், எதிர் கட்சிகள் நாடு முழுவதும் பல இடங்களில் போராட்டங்கள், பேரணிகள் நடத்தி வருகின்றனர். 
 
போராட்டம் நடைபெறும் இடங்களில் வன்முறை வெடிப்பதால் நாட்டில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது. இதனால் கலவரம் ஏற்படலாம் என கருதப்படும் பதட்டம் நிறைந்த பகுதிகளுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் செங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 4 பேருக்கு மேல் ஒரே இடத்தில் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 
webdunia
இந்நிலையில், டெல்லி - குர்கான் சாலையில் பல்வேறு இடங்களில் பேரிகார்டுகள் வைக்கப்பட்டு, சோதனைக்குப் பிறகே வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்குள்ளது. இதனால் வாகனங்கள் சாலைகளில் தேங்கி நிற்கின்றன. 
 
வாகனங்கள் நகராமல் அப்படியே நிற்பதை புகைப்படங்களாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட்டு வருகின்றனர். அதேபோல, மத்திய அரசின் உத்தரவால் டெல்லியில் சில பகுதிகளில் கால், எஸ்.எம்.எஸ் மற்றும் இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தோனீசியாவில் ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஆதிகால மனிதர்கள்