இது தியேட்டர் ஸ்க்ரீனா?.. இல்ல டிவி ஸ்க்ரீனா? – பிரபல தியேட்டரை ட்ரோல் செய்த நெட்டிசன்கள்!

Webdunia
திங்கள், 26 செப்டம்பர் 2022 (10:56 IST)
சென்னையில் பிரபல திரையரங்கு ஒன்றில் சிறிய அளவில் ஸ்க்ரீன் உள்ளதை நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

வாரம்தோறும் பல திரைப்படங்கள் வெளியாகி வரும் நிலையில் திரையரங்குகளின் எண்ணிக்கையும் அதிகரித்தபடி உள்ளன. சில பெரிய திரையரங்குகள் திரையரங்கை இரண்டாக பிரித்து இரண்டு ஸ்க்ரீன்கள் அமைப்பதும் வழக்கமாக உள்ளது.

ALSO READ: ’சூர்யா 42’ தயாரிப்பாளர் விடுத்த எச்சரிக்கை அறிவிப்பு!

சமீபமாக சென்னையில் உள்ள பிரபல தியேட்டர் ஒன்று நெட்டிசன்களின் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்களுமே வந்து செல்லும் பிரபலமான அந்த தியேட்டரில் உள்ள ஒரு ஸ்க்ரீனில் திரைப்படம் ஓட்டும் திரை மிகவும் சிறியதாக உள்ளது.

அந்த ஸ்க்ரீனில் படம் பார்ப்பது டிவியில் பார்ப்பது போல உள்ளதாக சமூக வலைதளங்களில் தெரிவித்து வரும் நெட்டிசன்கள், அதிக பணம் கொடுத்து படம் பார்க்க வரும்போது இதுபோன்ற சிறிய ஸ்க்ரீன்கள் ஏமாற்றம் அளிப்பதாகவும் கருத்து தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எந்த ஷா வந்தாலென்ன? கருப்பு சிவப்பு படை தக்க பாடம் புகட்டும்! முதல்வர் ஸ்டாலின்

ஆசைக்கு அளவில்லை என்பதற்கு அடையாளம் விஜய்”: த.வெ.க. தலைவரை விமர்சித்த அமைச்சர் கோவி. செழியன்

விஜய் போட்டாவ வச்சி என் பொண்ணு வாழ்க்கையே போச்சி!.. அட பாவமே!...

இட்லி, வடை, தோசை சாப்பிடுவது போன்ற ஒரு சாதாரண சந்திப்பு.. விஜய் சந்திப்பு குறித்து பிரவீன் சக்கரவர்த்தி

உபியில் 2.45 கோடி வாக்காளர் படிவங்கள் திரும்ப வரவில்லை.. SIRஆல் பாஜகவுக்கு சிக்கலா?

அடுத்த கட்டுரையில்
Show comments