நீட் தேர்வில் மாநில அளவில் நெல்லை மாணவன் முதலிடம்!

Mahendran
சனி, 14 ஜூன் 2025 (16:46 IST)
நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற நீட் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன! இதில், திருநெல்வேலியை சேர்ந்த மாணவர் சூரியநாராயணன், மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
 
கடந்த மே 4ஆம் தேதி நடந்த இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு முடிவுகள் இன்று  இணையதளத்தில் வெளியானது. நாடு முழுவதும் 557 நகரங்களில் நடத்தப்பட்ட இந்த தேர்வை 22.7 லட்சம் மாணவர்கள் எழுதியிருந்தனர். மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை www.neet.nta.nic.in என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
 
இந்த நிலையில், திருநெல்வேலி புஷ்பலதா பள்ளியை சேர்ந்த மாணவர் சூரியநாராயணன், நீட் தேர்வில் 665 மதிப்பெண்கள் பெற்று, மாநில அளவில் முதலிடத்தையும், தேசிய அளவில் 27-வது இடத்தையும் பிடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளார். மருத்துவ கனவுடன் காத்திருக்கும் பல மாணவர்களுக்கு இவரின் வெற்றி ஒரு உத்வேகமாக அமைந்துள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments