Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீட் தேர்வு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் திடீர் ஒத்திவைப்பு .. திமுக மாணவர் அணி அறிவிப்பு..!

Mahendran
சனி, 22 ஜூன் 2024 (08:04 IST)
நீட் தேர்வு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் திமுக மாணவரனி சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த ஆர்ப்பாட்டம் திடீர் ஒத்திவைப்பு என தகவல் வெளியாகியுள்ளது.
 
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஜுன் 24ம் தேதி  நீட் தேர்வு எதிர்ப்புஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக  அறிவிக்கப்பட்டு இருந்தது . மேலும் இந்த ஆர்ப்பாட்டத்துக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்த நிலையில் திடீர் ஒத்திவைப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 
நீட் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்துக்கான மாற்று தேதி பின்னர் தெரிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
 
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரணம் ஒரு பக்கம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் இந்த நேரத்தில் நீட் தேர்வு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தேவையில்லை என்று திமுக மாணவர் அணி முடிவு செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. 
 
ஆனால் அதே நேரத்தில் திமுக மாணவர் அணி நீட் தேர்வுக்கான எதிர்ப்பை தொடர்ந்து வலியுறுத்தும் என்றும் நீட் தேர்வை ஒழித்து கட்டும் வரை விடப்போவதில்லை என்றும் நான் கூறி வருகிறது. 
 
மேலும் விரைவில் நீட் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் குறித்த புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் திமுக மாணவர் அணி தரப்பில் கூறப்பட்டுள்ளது. 
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய், புஸ்ஸி ஆனந்த் பதிலளிக்க வேண்டும்: சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவு!

அதிமுக நிர்வாகிகள் ஊடகத்திற்கு பேட்டி அளிக்க வேண்டாம்: எடப்பாடி பழனிசாமி

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு இன்றும் உயர்வு.. அமெரிக்காவுக்கு நன்றி..!

10 கோவில்களில் கட்டண தரிசனம் முற்றிலும் ரத்து.. அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு..!

ஆளுனர் ரவி திடீர் டெல்லி பயணம்.. மசோதா தீர்ப்பு குறித்து அமித்ஷாவுடன் ஆலோசனையா?

அடுத்த கட்டுரையில்
Show comments