Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹஜ் புனித பயணம் சென்ற 98 இந்தியர்கள் பலி..! மத்திய அரசு தகவல்..!!

Senthil Velan
வெள்ளி, 21 ஜூன் 2024 (21:24 IST)
நடப்பாண்டில் ஹஜ் புனிதப்பயணம் சென்ற இந்தியர்களில் 98 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
 
சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா மதினாவுக்கு ஹஜ் புனித யாத்திரை செல்வதை இஸ்லாமிய மதத்தினர் முக்கிய மதக்கடமைகளில் ஒன்றாக கருதுகின்றனர். அதன்படி, ஆண்டுதோறும் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து மெக்கா மதினாவுக்கு இஸ்லாமிய மதத்தினர் புனிதப் பயணம் மேற்கொள்கின்றனர்.

ஹஜ் புனிதப் பயணம் மே 9 முதல் ஜூலை 22 வரை மேற்கொள்ளப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ஹஜ் புனிதப் பயணம் தொடங்கிய நிலையில் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமிய மதத்தினர் சவுதி அரேபியாவின் மெக்காவில் குவிந்து வருகின்றனர். 

98  இந்தியர்கள் பலி:

இந்நிலையில், நடப்பாண்டில் 1.75 லட்சம் இந்தியர்கள் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொண்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் நடப்பாண்டில் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொண்ட இந்தியர்களில் 98 பேர் உயிரிழந்துள்ளதாக கூறியுள்ளது.

ALSO READ: டாஸ்மாக் வருமானம் அதிகரிப்பு..! கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு ரூ. 1, 734 கோடி உயர்வு..!

இயற்கை மரணம், வயது மூப்பு மற்றும் விபத்து போன்ற காரணங்களால் 98 இந்தியர்கள் இறந்துள்ளனர். கடந்த ஆண்டு ஹஜ் பயணத்தின் போது 187 இந்தியர்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரஜினியை சந்தித்ததே அரசியல்தான்.. அரசியலுக்காகதான்! - சீமான் குடுத்த ட்விஸ்ட்!

எங்க இருந்து வந்துச்சு.. நொடி பொழுதில் உக்ரைனை தாக்கிய ஏவுகணை! ரஷ்யாவின் ரகசிய ஆயுதம்..?

அடுத்த கட்டுரையில்
Show comments