Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உயிரே போனாலும் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது: அண்ணாமலை

Siva
புதன், 17 ஏப்ரல் 2024 (16:04 IST)
பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படுமா என தேர்தல் பிரச்சாரத்தின் போது பொதுமக்கள் கேட்ட போது உயிரே போனாலும் நீட் தேர்வை ரத்து செய்ய மாட்டோம் என்று அண்ணாமலை தெரிவித்தார்.

பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை கோவையில் போட்டியிடும் நிலையில் இன்று அவர் இறுதி கட்ட பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் மக்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து கொண்டிருந்தபோது ஒருவர் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படுமா என்று கேட்டார்.

அதற்கு பதில் அளித்த அண்ணாமலை உயிரே போனாலும் நீட் தேர்வை ரத்து செய்ய மாட்டோம் என்றும் நீட் தேர்வை ரத்து செய்துதான் அரசியல் செய்ய வேண்டும் என்றால் அப்படிப்பட்ட அரசியல் எனக்கு தேவையில்லை என்றும் தெரிவித்தார்.

நீட் தேர்வால் தான் ஏழை எளிய மக்கள் தற்போது மருத்துவம் படித்து வருகிறார்கள் என்றும் நீட் தேர்வு ஒவ்வொரு மாணவருக்கும் அவசியமானது என்றும் அவர் கூறினார்.

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று பாஜக தவிர மற்ற அனைத்து அரசியல் கட்சிகளும் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் நீட் தேர்வு ரத்து செய்ய முடியாது என அண்ணாமலை கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமித்ஷா மீது வருத்தம் என்பது உண்மைதான்: முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம்..!

இந்தியா பாகிஸ்தான் போரை நான் நிறுத்தினேன் என்று சொல்லவே இல்லை: பல்டி அடித்த டிரம்ப்

ஆரம்பத்தில் சரிந்த பங்குச்சந்தை வர்த்தக முடிவில் உச்சம்.. குஷியில் முதலீடு செய்தவர்கள்..!

பாஜகவுடன் கூட்டணி இல்லை.. தவெக உறுதிபட அறிவிப்பு.. 3வது அணி உருவாகிறதா?

பிறந்த நாள் விழாவில் சாப்பிட்ட 27 பேர் மருத்துவமனையில் அனுமதி.. ஒருவர் பரிதாப பலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments