Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வலது கை, கால் துண்டிக்கப்பட்ட செந்தில் எவ்வாறு நவீனாவை கொன்றிருக்க முடியும்?-போலீஸார் விசாரணை

வலது கை, கால் துண்டிக்கப்பட்ட செந்தில் எவ்வாறு நவீனாவை கொன்றிருக்க முடியும்?-போலீஸார் விசாரணை
, வியாழன், 4 ஆகஸ்ட் 2016 (12:13 IST)
விழுப்புரம் மாவட்டத்தில் தனக்குத் தானே தீ வைத்துக் கொண்ட இளைஞர், தான் காதலித்த பெண்ணைக் கட்டிப்பிடித்ததால் அவரும் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.



ஜூலை மாதம் 30ம் தேதியன்று விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வி. பாளையம் பகுதியைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவியான நவீனாவின் வீட்டிற்குள் புகுந்த செந்தில் என்ற இளைஞர் பெட்ரோலை ஊற்றி தனக்குத் தானே தீ வைத்துக்கொண்டு, அந்தப் பெண்ணையும் கட்டிப்பிடித்தார்.

இதில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட செந்தில் அன்றே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த நவீனா புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி புதன்கிழமை காலை அவர் உயிரிழந்தார். இச்சம்பவத்தை அடுத்து வி. பாளையத்தில் பதற்றம் நிலவுவதால் அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

செந்தில் நவீனாவை நீண்ட காலமாக காதலித்து வந்ததாக கூறிவந்த நிலையில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் விழுப்புரம் மாம்பழப்பட்டு ரயில்வே பாதையில் கை - கால் துண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்தார். அதற்குப் பிறகு, நவீனாவின் பெற்றோரின் தூண்டுதலின் பேரிலேயே தான் தாக்கப்பட்டு கை-கால்கள் வெட்டப்பட்டதாக செந்தில் காவல்துறையிடம் புகார் அளித்திருந்தார். ஆனால், அவர் ரயிலில் அடிப்பட்டதிலேயே கைகால்கள் துண்டிக்கப்பட்டதாகத் தெரியவருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதற்குப் பிறகு நவீனாவும் அவரது குடும்பத்தினரும் கொடுத்த புகாரின் பேரில் செந்தில் சிறையில் அடைக்கப்பட்டு பிறகு விடுவிக்கப்பட்டார். அதற்குப் பிறகும் நவீனாவை அவர் தொந்தரவு செய்து வந்ததாக அவரது உறவினர்கள் ஊடகங்களிடம் தெரிவித்திருக்கின்றனர்.

இந்நிலையில் வலது கை, கால் துண்டிக்கப்பட்ட செந்தில் தனியாக செயல்பட்டு நவீனாவை எரித்துக் கொன்றிருக்க வாய்ப்பில்லை என்ற சந்தேகம் எழுந்தது.
இது குறித்து வன்னியர் சங்க தலைவர் குரு மற்றும் வக்கீல் பாலு ஆகியோர் போலீஸாரிடம் மனு அளித்தனர்.

இதையடுத்து நவீனா எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக செந்திலுக்கு யாரும் உடைந்தயாக இருந்தார்களா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களின் கவனத்திற்கு