Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேசிய அளவிலான மலைப்பகுதி சைக்கிள் போட்டி - தங்கம் , வெள்ளி வென்ற மாணவி!

Webdunia
சனி, 1 ஏப்ரல் 2023 (10:49 IST)
தேசிய அளவிலான மலைப்பகுதி சைக்கிள் போட்டியில் கோவையை சேர்ந்த மாணவி வெள்ளி மற்றும் தங்க பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.  
 
கடந்த 28, 29 ஆகிய இரு தேதிகளில் ஹரியானா மோர்னி மலையில் தேசிய அளவிலான சைக்கிள் போட்டி நடைபெற்றது. இதில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 18 வயதிற்கு கீழானவர்கள் கலந்து கொண்டனர்.இதில் கோவையை சேர்ந்த 8ம் வகுப்பு ஹாசினி என்ற மாணவி கலந்து கொண்டு வெள்ளை மற்றும் தங்கப் பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார். இவர் கடந்த ஐந்து வருடங்களாக இதற்காக பயிற்சி மேற்கொண்டுள்ளார். தமிழ்நாடு சைக்கிள் அசோசியேசன் மற்றும் கோயமுத்தூர் சைக்கிள் அசோசியேசன் இவர் இந்த போட்டியில் பங்கேற்க உதவி புரிந்துஉள்ளனர். 
 
வெள்ளி மற்றும் தங்கப் பதக்கங்களை வென்று கோவை திரும்பிய மாணவிக்கு கோவை விமான நிலையத்தில் அவரது உறவினர்கள் மற்றும் கோயமுத்தூர் சைக்கிள் உள்ளிட்டோர்ர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.இவர் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு ஹேலோ இந்தியாவில் தங்க பதக்கமும் வென்றுள்ளதும் பல்வேறு ட்ராக் போட்டிகளில் கலந்துகொண்டு பல்வேறு பதக்கங்களை வென்று உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் 6-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை: பெரும் பரபரப்பு

ஞானசேகரன் திமுக அனுதாபி.. சட்டமன்றத்தில் கூறிய முதல்வர் ஸ்டாலின்..!

தமிழ்நாட்டில் மனுநீதிச் சோழன் ஆட்சி நடைபெற்று வருகிறது: செல்வப்பெருந்தகை

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியா இல்லையா? எடப்பாடி பழனிசாமி என்ன சொல்கிறார்?

திருப்பதி வரும் பக்தர்களுக்கு முகக்கவசம் கட்டாயம்: அறங்காவலர் குழு தலைவர் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments