Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செவ்வாய் கிரகத்தின் மிக குறைந்த வெப்பநிலையில் ஹெலிகாப்டர்! – நாசா சாதனை!

Webdunia
புதன், 7 ஏப்ரல் 2021 (14:37 IST)
செவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொள்ள அனுப்பப்பட்ட நாசாவின் பெர்சவரன்ஸ் விண்கலத்தில் உள்ள ஹெலிகாப்டர் செவ்வாயின் சீதோஷ்ண நிலையை தாக்குபிடிப்பதாக நாசா தெரிவித்துள்ளது.

செவ்வாய் கிரகத்தில் அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா தொடர்ந்து ஆய்வுகள் செய்து வரும் நிலையில் சமீபத்தில் செவ்வாயின் மேற்பரப்புகளை ஆய்வு செய்ய பெர்சவரன்ஸ் விண்கலம் அனுப்பப்பட்டது. சமீபத்தில் வெற்றிகரமாக பெரசவரன்ஸ் ரோவர் செவ்வாயில் தரையிறங்கியதுடன் புகைப்படத்தையும் அனுப்பியது.

இந்நிலையில் ரோவருடன் அனுப்பப்பட்ட சிறிய ரக ஹெலிகாப்டரான இன்ஜெனூட்டியை விரைவில் ஆக்டிவேட் செய்ய உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. இந்த இன்ஜெனூட்டி ஹெலிகாப்டரில் முதன்முறையாக விமானத்தை கண்டுபிடித்த ரைட் சகோதரர்களின் முதல் விமானத்திலிருந்து ஒரு துணி கொண்டு வரப்பட்டு இணைக்கப்பட்டுள்ளது.
இந்த ஹெலிகாப்டர் விரைவில் பறக்க வைக்கப்பட உள்ள நிலையில் செவ்வாயில் நிலவும் மைனஸ் 90 டிகிரி வெப்பநிலையையும் கூட இந்த ஹெலிகாப்டர் தாங்குவதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மாவட்டங்களில் இன்று இரவு கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் எச்சரிக்கை..!

பதவியேற்பின்போது பாலஸ்தீனத்தை ஆதரித்து முழக்கம்.. ஒவைசி தகுதி நீக்கம் செய்யப்படுகிறாரா?

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் தலைமறைவு.. என்ன நடந்தது?

வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளை தடுக்க கூடாது: உச்சநீதிமன்றம் உத்தரவு..!

திமுகவும் இடைத்தேர்தலை புறக்கணித்துள்ளது: முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments