Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தேர்தலில் போட்டியிடாதது ஏன்? நாராயணசாமி விளக்கம்

Advertiesment
pudhuvai
, ஞாயிறு, 21 மார்ச் 2021 (15:30 IST)
நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் புதுவை மாநிலத்தில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி போட்டியிடவில்லை என்ற தகவல் அவரது ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சியை அளித்த நிலையில் தற்போது அவர் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்
 
புதுச்சேரியில் நடைபெறும் பொதுத்தேர்தலில் என்னை போட்டியிட சோனியா மற்றும் ராகுல் காந்தி வலியுறுத்தினார்கள். ஆனால் காங்கிரஸ் கட்சித் தலைவர் சுப்பிரமணியம் தேர்தலில் நிற்பதால் தேர்தல் பணிகளை கவனிப்பதற்காக நான் தேர்தலில் போட்டியிடவில்லை என நாராயணசாமி கூறினார்.
 
மேலும் ஏனாம் தொகுதியில் வேட்பாளரை தேர்வு செய்ய காலதாமதம் ஏற்பட்டது. எனவே அந்த தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் அசோக் என்ற வேட்பாளருக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவளிக்கும் என்று தெரிவித்தார்
 
மேலும் பாஜக தலைமையில் கூட்டணியா? என்ஆர் காங்கிரஸ் தலைமையில் கூட்டணியா? என்று தெரியவில்லை. ஆகவே அவர்களை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் பாஜக போட்டியிடும் தொகுதிகளில் என்ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களே சுயேச்சையாக போட்டியிடுவது அந்த அணிக்கு பின்னடைவு என்றும், எனவே மதச்சார்பற்ற எங்கள் அணி புதுவையில் வெற்றி பெறும் என்றும் அவர் தெரிவித்தார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆரணியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம்: முதல்வர் அறிவிப்பு