Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழகத்தில் உள்ள ஒரு அரசியல் கட்சிக்கு கூட துப்பில்லை: பாஜக பிரமுகர் டுவிட்

Advertiesment
tirupathi
, வெள்ளி, 29 ஏப்ரல் 2022 (19:39 IST)
சிவ பெருமான் குறித்து தரக்குறைவான விமர்சனத்தை செய்தவரைபாஜகவை தவிர்த்து தமிழகத்தில் உள்ள ஒரு அரசியல் கட்சிக்கு கூட துப்பில்லாதது தான் கேவலம் என பாஜக பிரமுகர் நாராயணன் திருப்பதி தனது டுவிட்டரில் கூறியுள்ளார். அவர் மேலும் இதுகுறித்து கூறியதாவது:
 
சிவ பெருமான் குறித்து தரக்குறைவான விமர்சனத்தை செய்த ஒரு தரங்கெட்ட பதர் மீது திமுக அரசு நடவடிக்கை எடுக்காதது கூட வியப்பளிக்கவில்லை. ஆனால், அந்த  அயோக்கியனை கண்டிப்பதற்கு பாஜகவை தவிர்த்து தமிழகத்தில் உள்ள ஒரு அரசியல் கட்சிக்கு கூட துப்பில்லாதது தான் கேவலம். அரசியல் என்கிற தொழிலை பாதுகாக்க அரசியல் தலைவர்களின் மௌனம் வெட்கக்கேடு . 
 
மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் பேசிய அந்த கொடியவனை கைது செய்ய காவல்துறை தயங்குவதேன்? இது தான் பேச்சுரிமை என்றால், இனி யார் வேண்டுமானாலும் எந்த கடவுள் குறித்தும் தரம்தாழ்ந்து பேசும் முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விடும் அபாயம் உருவாகும்.  தமிழக போலீஸ்  தன் கடமையை செய்ய வேண்டும். முதல்வர் அவர்கள் இது போன்ற களவாணிகளை, புறம்போக்குகளை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும்
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முன்னாள் அமைச்சர் ஜாமின் மனுவை ரத்து செய்ய வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் நடிகை மனு