Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போதையில் இருக்கும் ஈவிகேஎஸ் இளங்கோவன்: நாஞ்சில் சம்பத் பொளேர்!

போதையில் இருக்கும் ஈவிகேஎஸ் இளங்கோவன்: நாஞ்சில் சம்பத் பொளேர்!

Webdunia
புதன், 31 மே 2017 (11:20 IST)
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தமிழக தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போதையில் இருக்கிறார் என அதிமுகவின் நட்சத்திர பேச்சாளர் நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.


 
 
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படத்தை தமிழக சட்டசபையில் வைக்க இருப்பதாகவும், அதனை திறந்து வைக்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்திருப்பதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியிருந்தார்.
 
இந்நிலையில் இதுகுறித்து சில தினங்களுக்கு முன்னர் பேசிய இளங்கோவன், நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஜெயலலிதாவின் படத்தை முன்னாள் முதல்வர்கள் காமராஜர், அண்ணா, எம்ஜிஆர் ஆகியோரின் படங்களுடன் வைப்பது அவர்களை அவமானப்படுத்தும் செயலாகும்.
 
மேலும் ஜெயலலிதாவின் படத்தை சட்டமன்றத்தில் வைத்தால் வீரப்பன், ஆட்டோ சங்கர் ஆகியோரின் படத்தை ஐஜி அலுவலகத்தில் வைப்போம் என்றார். ஜெயலலிதாவுடன் சீரியல் கில்லர் ஆட்டோ சங்கர், சந்தன கடத்தல் வீரப்பன் ஆகியோரை இளங்கோவன் ஒப்பிட்டு பேசியது அதிமுகவினருக்கு கோபத்தை ஏற்படுத்தியது.
 
இதனையடுத்து இதற்கு கர்நாடக மாநில அதிமுகவை சேர்ந்த புகழேந்தி கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும் அவர் நாவடக்கத்துடன் மரியாதையாக பேச வேண்டும் இல்லையென்றால் அவர் வெளியில் வர முடியாது என கூறியிருந்தார்.
 
இந்நிலையில் இதுகுறித்து பேசிய நாஞ்சில் சம்பத், ஈவிகேஎஸ் இளங்கோவன் தந்தை பெரியாரின் பேரன்தானா என்ற சந்தேகம் வருகிறது என்றர். மேலும் ஜெயலலிதாவின் படத்தை சட்டமன்றத்தில் வைக்க கூடாது என கூறும் ஈவிகேஎஸ் இளங்கோவன் இன்னும் போதையில்தான் இருக்கிறார் என்றார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை தாராவியில் விஜய் வசந்த், திருமாவளவன் பிரச்சாரம்.. இந்தியா கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு..!

இண்டிகோ விமானங்களில் முதல்முறையாக பிசினஸ் கிளாஸ் சேவை.. டெல்லியில் இருந்து முதல் விமானம்..!

தனிப்பாடமாக கணினி அறிவியல்.. பள்ளிகளில் கணினி பட்டதாரி ஆசிரியர்கள்: டாக்டர் ராமதாஸ் கோரிக்கை..!

சிறப்பு பேருந்துகளை இயக்கியதால் ரூ.50 கோடி நஷ்டம்: அமைச்சருக்கு சிஐடியு கடிதம்

இடது கண்ணுக்கு பதிலாக வலது கண்ணில் அறுவை சிகிச்சை… மருத்துவர் மீது பகீர் புகார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments