நடிகை மைனா நந்தினி கைது? கணவர் தற்கொலை விவகாரம்!!

Webdunia
வெள்ளி, 14 ஏப்ரல் 2017 (09:47 IST)
கணவர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் முன் ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் நந்தினி தரப்பில் அளித்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.


 
 
வம்சம் படத்தில் அறிமுகமான நந்தினி, கேடி பில்லா கில்லாடி ரங்கா உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார். விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி தொடரில் மைனாவாக நடித்தார். மேலும் சில ரியாலிட்டி ஷோக்களிலும் சீரியலிலும் நடித்துவந்தார்.
 
கடந்த ஆண்டு ஜூன் மாதம் நந்தினிக்கும் ஜிம் கோச்சர் கார்த்திக்கிற்கும் திருமணம் நடந்தது. இந்நிலையில் விருகம்பாக்கத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார் கார்த்திகேயன். 
 
கார்த்திகேயன் தனது தற்கொலைக்கு நந்தினியின் தந்தை தான் காரணம் என்று கடிதம் ஒன்றை எழுதி வைத்திருந்தார். திருமணமாகி ஓராண்டு கூட ஆகாத நிலையில் கார்த்திகேயன் தற்கொலை செய்து கொண்டதால் உறவினர் அளித்த புகாரின் பேரில் விருகம்பாக்கம் போலீசார் நந்தினி மற்றும் அவர் தந்தை ராஜேந்திரன் மீது வழக்கு பதிவு செய்தனர். 
 
கைதுக்கு பயந்து நந்தினியும் அவர் தந்தையும் முன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தனர். ஆனால் அந்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். இதனால், நந்தினியும் அவர் தந்தையும் எந்நேரத்திலும் கைதாகலாம் என்ற நிலை உருவாகியுள்ளது. 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வளர்ப்பு கிளியை காப்பாற்ற போய் உயிரிழந்த நபர்.. பெங்களூரில் சோகம்...

அண்ணாமலை கம்முனு இருக்கணும்.. தலைவருக்கு தெரியும்!.. தவெக பதிலடி!...

டிசம்பர் 19-ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல்.. பெயர் நீக்கப்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்?

10 லட்சத்தில் தொழில்.. 2 லட்சம் கடன்!.. விண்ணப்பிப்பது எப்படி?...

சென்னை வருகிறார் பியூஷ் கோயல்.. அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments