Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கற்பனை நோய்: அதிமுக' நாளேடு விமர்சனம்

Webdunia
வியாழன், 28 ஜூன் 2018 (09:20 IST)
பாஜகவின் பிடியில் அதிமுக இருப்பதாகவும், மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் அதிமுக அரசு இருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து கொண்டிருக்கும் நிலையில் பாஜக அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை அதிமுகவின் அதிகாரபூர்வ நாளேடான 'நமது புரட்சித்தலைவி அம்மா' நாளிதழ், கடுமையாக விமர்சனம் செய்து கவிதை ஒன்றை பிரசரித்துள்ளது. 
 
இந்த கவிதையில் 'பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கற்பனை நோய் இருப்பதாகவும், திமுகவும் அதிமுகவும் கூட்டணி வைத்திருக்கிறது என்று பொன்.ராதாகிருஷ்ணன் பேசிய புதுக்கதை புல்லரிக்க வைக்கிறது' என்றும் கூறப்பட்டுள்ளது. சமீபத்தில் திமுகவும் அதிமுகவும் மறைமுகமாக கூட்டணி வைத்திருப்பதாக பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி ஒன்றில் கூறியதற்கு பதிலடியாக இந்த கவிதை பிரசரிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
 
இந்த கவிதையில் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்தாலும், இது பாஜக-அதிமுக இடையே மறைமுக கூட்டு இல்லை என்பதை வெளிப்படுத்துவதற்கான நாடகம் என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

முட்டைகளை ஏற்றி சென்ற கண்டெய்னர் லாரி விபத்து.. சாலையில் சிதறிய லட்சக்கணக்கான முட்டைகள்..!

ஜெயங்கொண்டம் அருகே குழந்தையை தண்ணீரில் அமுக்கிக் கொன்ற தாத்தா… மூட நம்பிக்கையால் நடந்த கொடூரம்!

பெண் காவலருக்கு அரிவாள் வெட்டு..! பட்டப்பகலில் நடந்த பயங்கரம்..!!

EVM முறையை ஒழிக்க வேண்டும்..! ராகுல் காந்தி ட்வீட்..!!

ஆர்.எஸ்.எஸ்.தலைவர் கொடுத்த அறிவுரை.. மணிப்பூர் குறித்து ஆலோசனையில் அமித்ஷா..!

அடுத்த கட்டுரையில்
Show comments