Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தறுதலையை நம்பி போன... கவிதையில் கலாய்க்கும் நமது அம்மா!

Advertiesment
தறுதலையை நம்பி போன... கவிதையில் கலாய்க்கும் நமது அம்மா!
, வெள்ளி, 26 அக்டோபர் 2018 (12:52 IST)
கடந்த ஆண்டு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சிக்கு எதிராக ஆளுநரிடம் 18 தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் மனு அளித்தனர். அதனால் அதிமுக கொறடா உத்தரவில் சபாநாயகர் அந்த 18 எம்.எல்.ஏக்களையும் தகுதிநீக்கம் செய்தார். 
 
இந்த வழக்கின் தீர்ப்பில் சபாநாயகர் தனபால் எடுத்த நடவடிக்கை தவறில்லை எனக் கூறி 18 எம்.எல்.ஏக்களின் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் அந்த 18 எம்.எல்.ஏக்களும் தங்கள் பதவியை இழந்துள்ளனர். 
 
இந்நிலையில் இந்த விவகாரத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்னவென மதுரையில் தனது ஆதரவாளர்களுடன் அமமுக கட்சி தலைவர் டிடிவி தினகரன் ஆலோசித்து வருகிறார். இவர்கள் ஒரு முடிவுக்கு வருவதற்குள் அதிமுக கட்சியின் அதிகாரப்பூர்வ நாலிதழான நமது அம்மா இந்த 18 பேரை விமர்சித்து கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளது. 
 
கூடா நட்பு கோர்ட்டால் முடியும் என்ற பெயரில் தினகரன் ஆதர்வாளர்களை கேலி செய்யும் விதமாக கவிதை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், ”மாஃபியாவை நம்பி மகராசி இயக்கம் விட்டு முறை தவறி போனவர்கள் முச்சந்தியில் நிற்கிறார்கள் முகவரியற்று முடிகிறார்கள்.
 
தறுதலையை நம்பி இலை கொண்ட இயக்கம் விட்டு தடம் மாறிப் போனவர்கள் நட்டாற்றில் நிற்கிறார்கள், நல்வாழ்வு இழக்கிறார்கள். அண்ணா திமுக என்னும் ஆலயத்தை விட்டு ஆமமூக்கன் கட்சிக்கு ஆதாயத்துக்குப் போனவர்கள் அந்தரத்தில் நிற்கிறார்கள், அரசியல் அநாதைகள் ஆகிறார்கள்” போன்ற வரிகள் இடம்பெற்றுள்ளன. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

என்ன இப்படி ஆகிவிட்டது–மூட் அவுட்டில் ஸ்டாலின்