Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நளினி பரோல் மனு நீட்டிப்பு மனு – நிராகரித்த நீதிமன்றம் !

Webdunia
வியாழன், 12 செப்டம்பர் 2019 (12:23 IST)
நளினி தனக்கு வழங்கப்பட்ட பரோலை நீட்டிக்க கோரி தொடர்ந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி 27 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்து வரும் நளினி தனது மகள் திருமணத்திற்கான வேலைகளை செய்ய வேண்டும் எனக் கோரி நளினி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவை ஏற்ற நீதிமன்றம் அவருக்கு ஊடகங்களில் பேட்டி அளிக்கக் கூடாது போன்ற நிபந்தனைகளோடு ஒரு மாதக் காலம் பரோல் வழங்கியது.

கடந்த ஜூலை மாதம் 25 ஆம் தேதி வெளியே வந்த நளினி தனது மகள் திருமணத்துக்கான வேலைகளை செய்து வந்தார். இந்நிலையில் அவரது பரோல் காலம் முடியவுள்ள நிலையில் மகளின் திருமண வேலைகள் முடியாததால் பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்க வேண்டும் எனக் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனுவை ஏற்ற நீதிமன்றம் இது சம்மந்தமாக நாளைக்குள் பதிலளிக்க வேண்டும் எனத் தமிழக அரசை அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து இன்று நடந்த விசாரணையின் போது நளினிக்கு மேலும் 3 வாரகாலம் பரோலை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. செப்டம்பர் 15 வரை அவரது பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் உள்ள தனது மாமியார் விசா பிரச்சினை காரணமாக இந்தியா வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதனால் திருமண வேலைகளைக் காரணம் காட்டி அடுத்தமாதம் 15 ஆம் தேதி வரை பரோல் நீட்டிப்புக் கேட்டு மனு அளித்தார். இந்த மனுவை நீதிமன்றம் ஏற்க மறுத்தது. அதையடுத்து நளினி அந்த மனுவை திரும்பப் பெற்றுக்கொண்டார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளத்தொடர்பில் உள்ளவர்கள் கணவனிடம் ஜீவனாம்சம் பெற முடியாது! - நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

யூடியூபர் ஜோதி வீட்டில் கைப்பற்றப்பட்ட டைரி... அந்த 2 வார்த்தையால் போலீசார் அதிர்ச்சி..!

பல நூற்றாண்டுகளுக்கு முன் வாங்கப்பட்ட நகைகளுக்கு எப்படி ரசீது கொடுக்க முடியும்: ராமதாஸ்

இந்தியா தராவிட்டால் என்ன? பாகிஸ்தானுக்கு நாங்கள் தண்ணீர் தருவோம்: சீனா

4 மாத குழந்தையை கடித்துக் கொன்ற வளர்ப்பு நாய்! ராட்வெய்லரை தடை செய்ய கோரிக்கை!

அடுத்த கட்டுரையில்