Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் சங்க தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது

Webdunia
ஞாயிறு, 23 ஜூன் 2019 (08:21 IST)
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலை நடத்தலாம், ஆனால் பதிவான வாக்குகளை எண்ணக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் திட்டமிட்டபடி இன்று நடிகர் சங்க தேர்தல் நடைபெற்று வருகிறது.
 
சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் தற்போது நடிகர் சங்க தேர்தல் நடைபெற்று வருகிறது. கடந்த 2015-ம் ஆண்டு நடந்த நடிகர் சங்க தேர்தலும் இதே பள்ளியில்தான் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. காலை 7 மணி முதல் நடிகர், நடிகைகள் தங்களுடைய வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். சற்றுமுன் நடிகை குஷ்பு, நடிகர் பசுபதி, நடிகர் சார்லி ஆகியோர் தங்களுடைய வாக்குகளை பதிவு செய்தனர். 
 
நடிகர் சங்க தேர்தலை அடுத்து பலத்த பாதுகாப்பு அந்த பள்ளியை சுற்றிலும் போடப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் விஷாலின் பாண்டவர் அணியும், கே.பாக்யராஜின் சுவாமி சங்கரதாஸ் அணியும் மோதுகின்றன.

தொடர்புடைய செய்திகள்

ராஜீவ் காந்தியின் 33 -வது ஜோதி வாகனப் பயணம் தொடங்கிய இடத்திலே நிறுத்தம்-மாநில தலைவரின் கடிதம் ஏற்படுத்திய தடை!

10 ரூபாய் காயின்களை வாங்கலைனா கடும் நடவடிக்கை! – கடைகளுக்கு எச்சரிக்கை!

நீதிமன்ற அனுமதியின்றி யாரையும் கைது செய்யக்கூடாது..! ED-க்கு உச்சநீதிமன்றம் செக்..!!

இலங்கை மீனவர்கள் 14 பேர் கைது. இந்திய கடற்படையினர் அதிரடி..!

ரூ.22 கோடி கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல்.. சென்னையில் 5 பேர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments