Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாட்டுப் பணியில் துஞ்சிய வீரமகனுக்கு எனது வணக்கமும் அஞ்சலியும்!- முதல்வர் ஸ்டாலின்

Webdunia
வியாழன், 9 டிசம்பர் 2021 (01:03 IST)
முப்படைகளின் தலைமைத் தளபதி சென்ற ஹெலிகாப்டர் விபத்தில்  சிக்கி  அவருடன் அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர்  உயிரிழந்த நிலையில்  நாட்டுப் பணியில் துஞ்சிய வீரமகனுக்கு எனது வணக்கமும் அஞ்சலியும்  என முதல்வர் ஸ்டாலின் டுவிட் பதிவிட்டுள்ளார்.
 
இன்று குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவிக்கு வரும்10 ஆம் தேதி இறுதி சடங்கு நடைபெறும் எனது தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மாநில முதலமைச்சர்கள் இரங்கல்முப்படை ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் அவர்கள் ஹெலிகாப்டர் விபத்தில் காலமான நிலையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் இரங்கல் தெரிவித்தனர் . அதேபோல் மாநில முதலமைச்சர்கள் பிபின் ராவத் மறைவுக்கு தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர். 
 
இந்நிலையில், ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவிக்கு வரும் 10  ஆம் தேதி இறுதி சடங்கு நடைபெறும் எனவும்,ராவத் வீட்டில்  காலை 11  மணி முதல்  2 மணிவரை பொதுமக்கள் பார்வைக்காக உடல்கள் வைக்கப்படும் எனவும், டெல்லி கண்டோன்மெண்டில் உள்ள மயானத்தில் உடல்கள் தகனம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
தற்போது,தமிழ்நாடு முதல்வர் தனது டுவிட்டர் பக்கத்தில்,முப்படைகளின் தலைமைத் தளபதி சென்ற ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய செய்தி அறிந்ததுமே குன்னூருக்கு விரைந்து; இராணுவ அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு மாநில அரசின் சார்பில் அனைத்து உதவிகளையும் வழங்கிட உறுதியளித்துள்ளேன். 
 
நாட்டுப் பணியில் துஞ்சிய வீரமகனுக்கு எனது வணக்கமும் அஞ்சலியும்! என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மன்னிப்பு கேட்டும் நடிகை கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு! பரபரப்பு தகவல்..!

நான் நன்றாக போராடுவேன். போராட எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்: பிரியங்கா காந்தி

திருப்பதி லட்டு விவகாரம்.. 5 பேர் கொண்ட சிறப்புக்குழு அமைப்பு..!

கோவில் அருகே கூடினால் கைது: இந்துக்களுக்கு கனடா போலீசார் எச்சரிக்கை..!

அடுத்த அமெரிக்க அதிபர் யார்? வாக்குப்பதிவு தொடக்கம்.. நாளை காலை முன்னிலை விவரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments