Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 2 வேட்பாளர்கள் அறிவிப்பு.. திருப்பூர், நாகையில் யார் யார் போட்டி?

Mahendran
திங்கள், 18 மார்ச் 2024 (17:47 IST)
திமுக கூட்டணியில் இடம் பெற்று இருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திருப்பூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது அந்த இரண்டு தொகுதிகளுக்கான வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் அவர்கள் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

 திருப்பூர் தொகுதியில் கே.சுப்புராயனும், நாகப்பட்டினம் தனித் தொகுதியில் வை.செல்வராஜும் போட்டியிடவுள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் போட்டியிடுகின்றனர்.

பிரதமர் மோடி அடிக்கடி தமிழகம் வருகிறார். ஒவ்வொரு முறை அவர் வரும்போது பொய் பேசுகிறார். சென்னை, தென் மாவட்ட மக்கள் வெள்ளத்தில் மிதந்த போது பிரதமர் மோடி ஏன் வரவில்லை. இன்று வரை நிவாரண நிதியாக ஒரு ரூபாய் கூட வழங்கவில்லை. ஆனால், பொதுக்கூட்டங்களில் இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்ட போது தமிழக அரசு நிதி அளிக்கவில்லை என்று பொய் பேசுகிறார்.

மொழியை பற்றி பிரமாதமாக பேசுகிறார். ஆனால், தமிழ் மொழிக்கு அளிக்கப்படும் நிதி என்பது மிகக்குறைவு. தமிழக மக்கள் இதற்கெல்லாம் ஏமாற மாட்டார்கள். தேர்தல் முடிவில் அது தெரியும்’ என்று பேசினார்

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டி.. நாளை முதல் முன்பதிவு தொடக்கம்..!

பிரியங்கா காந்தி கன்னம் போல சாலை அமைப்பேன்: பாஜக வேட்பாளர் சர்ச்சை பேச்சு..!

திருமணமாகாதவர்கள் தங்க அனுமதி இல்லை: ஓயோ அதிரடி அறிவிப்பு..!

சிந்துவெளி எழுத்து முறை.. ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!

டி.என்.பி.எஸ்.சி மூலம் தேர்ந்தெடுக்கப்படவுள்ள ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் எத்தனை பேர்? அன்புமணி கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments