Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாங்க ஓட்டு போடலைனா ஜெயிக்க முடியுமா? – செல்லூராரோடு வாக்குவாதம் செய்த பெண்!

Webdunia
திங்கள், 16 மார்ச் 2020 (11:22 IST)
விருதுநகரில் நடைபெற்ற பெட்ரோல் விற்பனை நிலைய தொடக்க விழாவில் அமைச்சர் செல்லூர் ராஜூவை பெண் ஒருவர் மேடையில் வைத்து கேள்வி கேட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் கூட்டுறவு துறை சார்பில் தொடங்கப்பட்டுள்ள பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை நிலையத்தின் திறப்பு விழாவில் அமைச்சர் செல்லூர் ராஜூ மற்றும் ராஜேந்திர பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டனர்.

விற்பனை நிலையத்தை திறந்து வைத்த பிறகு அங்குள்ள மக்களுக்கு மேடையில் வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினர். அப்போது நலத்திட்ட உதவிகளை பெற வந்த இஸ்லாமிய பெண் ஒருவர் ”சிஏஏவுக்கு ஏன் ஆதரவு அளித்தீர்கள்? இங்குள்ள இஸ்லாமியர்கள் ஓட்டு போட்டிருக்கா விட்டால் உங்களால் வெற்றி பெற்றிருக்க முடியுமா?” என்று கேள்வியெழுப்பியுள்ளார்.

அதற்கு அமைச்சர்கள் அதனால் பாதிப்பு எதுவும் இல்லை என்று விளக்கமளிக்க முயன்றுள்ளனர். ஆனால் அந்த பெண் மேடையிலேயே அவர்களோடு வாக்குவாதத்தில் ஈடுபட தொடங்கியதால் விழாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தோண்ட தோண்ட பிணங்கள்.. மியான்மரில் தொடரும் சோகம்! பலி எண்ணிக்கை 2 ஆயிரமாக உயர்வு!

நகராட்சிகளாக மாறிய 7 பேரூராட்சிகள்: தமிழக அரசு அரசாணை..!

ஏலச்சீட்டு நடத்தி மோசடி.. கணவருடன் கைதான முன்னாள் பாஜக பெண் நிர்வாகி..!

தாய்லாந்து, மியான்மரை அடுத்து இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்: அலறியடித்து ஓடிய மக்கள்..!

நிதியமைச்சரை சந்தித்த செங்கோட்டையன்! ஒய் பிரிவு பாதுகாப்பா? - அதிமுகவில் மீண்டும் புகைச்சல்?

அடுத்த கட்டுரையில்
Show comments