Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை பரோலில் விடுவிக்க வேண்டும்: முத்தரசன் கோரிக்கை

Webdunia
வியாழன், 9 ஜூன் 2016 (17:30 IST)
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை பரோலில் விடுதலை செய்ய வேண்டும் என்று முத்தரசன் ஜெயலலிதாவுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
 

 

 

 

 

 
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கியுள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் பரோலில் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதாவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
 
இதுகுறித்து முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
முன்னால் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு, ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. வரும் 11ஆம் தேதியுடன் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு 25 ஆண்டுகள் முடிவடைகிறது.
 
மனிதாபிமான அடிப்படையில் அவர்களை விடுவிக்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுதொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது.
 
சாதாரணமாக ஆயுள் தண்டனை பெற்றவர்களை 10 ஆண்டுகளில் சிறையில் இருந்து விடுதலை செய்ய சட்டத்தில் வழிவகைகள் உள்ளன. இவற்றினை கருத்தில் கொண்டு பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய முதலமைச்சர் ஜெயலலிதா நடவடிக்கை எடுக்க வெண்டும், என்று கூறியுள்ளார்.
  
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிமுகவில் மீண்டும் தளவாய் சுந்தரம்.. பறிபோன பதவி மீண்டும் கிடைத்தது..!

இனி எழும்பூரில் இருந்து இந்த 2 ரயில்கள் புறப்படாது.. தாம்பரம் தான்..!

பீட்சா, பர்கர் சாப்பிட்ட கூடைப்பந்து வீராங்கனை உயிரிழப்பு; சென்னையில் அதிர்ச்சி சம்பவம்..!

திடீரென தலைமை அலுவலகத்தை மாற்றும் அமேசான்.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments