Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆற்காடு சுரேஷ் உருவப்படம் அருகே ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்த கத்தி.. அதிர்ச்சி தகவல்..!

Mahendran
சனி, 6 ஜூலை 2024 (16:01 IST)
ஆம்ஸ்ட்ராங்கை நேற்றிரவு கொலை செய்த மர்ம கும்பல், திருவள்ளூர் மாவட்டத்திற்கு சென்று ஆற்காடு சுரேஷின் படத்தில் ரத்தக்கறை கத்தியை வைத்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
 
நேற்று ஆற்காடு சுரேஷின் பிறந்தநாள் என்பதால் ஆம்ஸ்ட்ராங்கை கொன்று விட்டு, கொலைக்கு பயன்படுத்திய கத்தியை ஆற்காடு சுரேஷின் புகைப்படம் வைத்ததாக கூறப்படுகிறது. மேலும் கத்தியை வைத்தபின் திருவள்ளூர் நீதிமன்ற வழக்கறிஞர் ஒருவருடன் சென்னை அண்ணாநகர் காவல் நிலையத்திற்கு வந்து சரணடைந்தனர். கொலை செய்தபின் பதற்றத்தில் 3 நாட்டு வெடிகுண்டுகள், 5 பட்டாக்கத்திகளை சம்பவ இடத்திலேயே விட்டு சென்றதும் தெரிய வந்துள்ளது.
 
ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கில் ஆம்ஸ்ட்ராங்சாங் காரணம் என்று சந்தேகப்படும் நிலையில் அவரது பெயர் குற்றவாளிகளின் பட்டியலில் சேர்க்காததால் தான் ஆற்காடு சுரேஷ் ஆதரவாளர்கள் அவரது பிறந்தநாள் அன்று ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. 
 
எனவே இது பழிக்கு பழி வாங்கும் ஒரு சம்பவம் என கருதப்படுகிறது. இது குறித்து தீர விசாரிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே இது போன்று பழிக்கு பழி வாங்கும் சம்பவங்கள் தமிழகத்தில் நடந்துள்ள நிலையில் அதேபோன்று இன்னொரு சம்பவமும் நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
இதேபோல் ஆம்ஸ்ட்ராங் தரப்பினரும் கொலை வெறியில் மீண்டும் பழிவாங்கும் நடவடிக்கை எடுத்தால் என்ன செய்வது என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். மாறி மாறி பழிவாங்கும் கொலை செய்து வந்தால் தமிழகம் என்ன ஆவது என்றும், அரசு இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

7 மாவோயிஸ்டுகள் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை! அதிகாலையில் நடந்த அதிரடி..!

மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசைக் கோரியதே திமுக அரசு தான்: அண்ணாமலை

நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. கல்வி அமைச்சர் அறிவிப்பு..!

முதல்வரின் திமிர் பேச்சுக்கு மக்கள் தக்க பாடத்தை நிச்சயம் புகட்டுவார்கள்: ஈபிஎஸ்

லண்டனில் இருந்து சென்னை திரும்பினார் அண்ணாமலை.. முதல் பேட்டியில் விஜய் குறித்த கருத்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments