Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டெண்டர்கள் மூலம் விஜயபாஸ்கர் சொத்து சேர்த்துள்ளாரா...??

டெண்டர்கள் மூலம் விஜயபாஸ்கர் சொத்து சேர்த்துள்ளாரா...??
, புதன், 28 ஜூலை 2021 (12:07 IST)
போக்குவரத்துத் துறை டெண்டர்கள் மூலம் விஜயபாஸ்கர் சொத்து சேர்த்துள்ளாரா எனவும் விசாரணை நடத்தி வந்தனர். 

 
அதிமுக ஆட்சியின்போது போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் எம்.ஆர்.விஜயபாஸ்கர். அமைச்சராக இருந்தபோது எம்.ஆர்.விஜயபாஸ்கர் முறைகேடாக சொத்து சேர்த்ததாக வெளியான புகாரின் பேரில் சமீபத்தில் அவரது வீட்டில் வருமானவரி சோதனை நடைபெற்றது.
 
இந்நிலையில் தற்போது எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது சொத்துக்குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டு தேர்தல் வேட்பு மனுவில் சொத்து மதிப்பை ரூ.2.51 கோடியாக காட்டப்பட்ட நிலையில் கடந்த தேர்தலில் சொத்து மதிப்பு ரூ.8.62 கோடியாக உயர்ந்துள்ளது. 
 
இதனால் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பதவியில் இருந்தபோது 55% அதிகமான சொத்தை சேர்த்துள்ளதாக முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் போக்குவரத்துத் துறை டெண்டர்கள் மூலம் விஜயபாஸ்கர் சொத்து சேர்த்துள்ளாரா எனவும் விசாரணை நடத்தி வந்தனர்.
 
இதனிடையே போக்குவரத்துத் துறையில் டெண்டர்பெற்ற நிறுவனங்களுக்கு ஏஜெண்டாக செயல்பட்ட, சென்னை அண்ணாநகரில் உள்ள ரவிக்குமார் என்பவரின் அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டது. இந்த ஆவணங்களை ஆய்வு செய்த பிறகே விஜயபாஸ்கர் டெண்டர் ஊழலில் ஈடுபட்டாரா என்பது குறித்து தெரியவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

யுனெஸ்கோவால் அங்கீகாரம் பெற்ற ஹரப்பா நகரம்! – பிரதமர் மோடி மகிழ்ச்சி!