Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய்யை சின்ன வயசுல இருந்தே தெரியும்.. அரசியலுக்கு வந்தால்..? - கனிமொழி கொடுத்த அட்வைஸ்!

Prasanth Karthick
திங்கள், 12 ஆகஸ்ட் 2024 (09:29 IST)

ஒரு நிகழ்ச்சியில் நடிகர் விஜய்யின் அரசில் வருகை குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு திமுக எம்.பி கனிமொழி பதில் அளித்துள்ளார்.

 

 

தமிழ் சினிமாவில் தனி முத்திரை பதித்து ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ளவர் நடிகர் விஜய். முன்பிருந்தே அரசியல் ஆர்வம் விஜய்க்கு இருந்து வந்த நிலையில் மக்கள் இயக்கத்தை தொடங்கி ரசிகர்கள் மூலமாக மக்களுக்கு பல உதவிகளை செய்து வந்தார். சமீபத்தில் தனது அரசியல் வருகையை அறிவித்தவர், தனது கட்சிக்கும் தமிழக வெற்றிக் கழகம் என பெயர் சூட்டினார்.

 

இந்நிலையில் சமீபத்தில் திமுக எம்.பி கனிமொழி ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது அவரிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டது. ஒரு திரையில் ஜெயலலிதா, விஜய், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரின் புகைப்படங்களை காட்டி கனிமொழியிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டன.

 

அதில் ”வெற்றிகரமாக திரையுலகில் பயணத்தை நிறைவு செய்து அரசியலுக்கும் வருகிறார் நடிகர் விஜய். ஒரு அரசியல்வாதியாக, அவரது நலம் விரும்பியாக அவருக்கு நீங்கள் வழங்கும் அறிவுரை என்ன?” என்று கேட்கப்பட்டது.

 

அதற்கு எம்.பி கனிமொழி “விஜய்யின் குடும்பத்தினருடன் எனக்கு சிறுவயதில் இருந்தே பழக்கம் உண்டு. அப்போதிருந்தே விஜய்யை பார்த்து வருகிறேன். எப்படி சினிமாவில் தனக்கான உழைப்பு,  பாதையில் தெளிவாக பயணித்தாரோ, அதே உழைப்பு, சரியான பாதையில் அரசியலிலும் பயணிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டி.. நாளை முதல் முன்பதிவு தொடக்கம்..!

பிரியங்கா காந்தி கன்னம் போல சாலை அமைப்பேன்: பாஜக வேட்பாளர் சர்ச்சை பேச்சு..!

திருமணமாகாதவர்கள் தங்க அனுமதி இல்லை: ஓயோ அதிரடி அறிவிப்பு..!

சிந்துவெளி எழுத்து முறை.. ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!

டி.என்.பி.எஸ்.சி மூலம் தேர்ந்தெடுக்கப்படவுள்ள ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் எத்தனை பேர்? அன்புமணி கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments