சென்னையில் வழக்கம்போல் ஓடும் பேருந்துகள்: என்ன ஆச்சு வேலைநிறுத்தம்?

Webdunia
செவ்வாய், 7 ஆகஸ்ட் 2018 (08:44 IST)
புதிய மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை வாபஸ் பெற வலியுறுத்தி இன்று நாடு தழுவிய அளவில் மோட்டார் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் இன்று பேருந்துகள், ஆட்டோக்கள் ஓடாது என்று நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது.
 
ஆனால் சென்னையில் வழக்கம்போல் பேருந்துகள் ஓடுகின்றன. அதேபோல் ஆட்டோக்கள், ஷேர் ஆட்டோக்களும் வழக்கம்போல் ஓடுவதால் சென்னையில் இயல்பு வாழ்க்கை பாதிக்கவில்லை.  இருப்பினும் புதுச்சேரியில் ஆட்டோக்கள் ஓடவில்லை என்றும் ஒருசில பேருந்துகள் ஓடவில்லை என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது. 
 
மோட்டார் வாகன சட்டத்திருத்தத்தை வாபஸ் பெற வேண்டும், பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று நாடு முழுவதும் நடந்து வரும் வேலைநிறுத்த போராட்டத்திற்கு எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கவிலலை என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 மாநிலங்களவை வேட்பாளர்களை தேர்வு செய்த திமுக!...

திமுகவுடன் கூட்டணியை உறுதி செய்த காங்கிரஸ்.. ஏமாந்து போன தவெக... வடை போச்சே!...

உறுதியான திமுக - காங்கிரஸ் கூட்டணி!.. தொகுதி பங்கீடு ஓவர்!.. செல்வபெருந்தகை பேட்டி!...

போரால் எந்த பிரச்சனையும் வராது!. நாங்க இருக்கோம்!.. டொனால்ட் டிரம்ப் நம்பிக்கை..

ஈரான் - இஸ்ரேல் போரால் கடலில் தவிக்கும் இந்திய கப்பல்கள்!.. 1100 பேரின் கதி என்ன?..

அடுத்த கட்டுரையில்
Show comments