Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாமியாரும் விஷம் குடித்தார்… மருமகளும் விஷம் குடித்தார்- சேலத்தில் பரிதாபம்

Webdunia
செவ்வாய், 16 அக்டோபர் 2018 (13:49 IST)
சேலத்தை அடுத்த பெரியபுதூர் எனும் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மாமியார் சாந்தி மற்றும் மருமகள் சரஸ்வதி இருவரும் குடும்பப் பிரச்சனைக் காரணமாக விஷம் குடித்துள்ளனர்.

சுந்தரம் சாந்தி தம்பதியினருக்கு மூன்று மகள்கள் மற்றும் இரண்டு மகன்கள். இதில் மூத்த மகன் சுரேஷுக்கு சரஸ்வதி என்ற பெண்ணோடு 6 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. அவர்களுக்கு 5 வயதில் மகன் ஒருவன் உள்ளான்.

இதனிடையே சுரேஷுக்கும் சரஸ்வதிக்கும் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு சரஸ்வதி தனது பெற்றோர் வீட்டிலேயே சில வருடங்களாக தங்கி இருந்துள்ளார். அதனால் இருவரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கூடிப் பேசி இருவரையும் சமாதானம் பேசி சேர்த்து வைத்துள்ளனர்.

ஆனாலும் வழக்கம்போல குடும்பத்தில் தகராறுகள் வந்து கொண்டுதான் இருந்துள்ளன. அதேப்போல இரு தினங்களுக்கு முன்னால் சரஸ்வதிக்கும் அவரது மாமியார் சாந்திக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. பிரச்சனை முற்றவே இருவரும் விஷம் குடித்து சாகப்போவதாக ஒருவரை ஒருவர் மிரட்டி உள்ளனர். உறவினர்களும் வழக்கம் போல சாதாரண பிரச்சனைதான் என கண்டுகொள்ளாமல் விட்டுள்ளனர்.

ஆனால் சொன்னபடியே மாமியார் சாந்தி நள்ளிரவில் விஷத்தைக் குடித்து வீட்டில் இறந்து கிடந்திருக்கிறார். தகவலறிந்த காவல்துறை உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிச்சோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதற்கிடையில் தன்னால் தான் மாமியார் விஷமருந்து இறந்துவிட்டார் என உறவினர்கள் குற்றம் சாட்டுவார்கள் என பயந்து தானும் எலி மருந்தை சாப்பிட்டு மயக்கமடைந்துள்ளார். அவரை உடனடியாக மீட்ட உறவினர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணா பல்கலைக்கழகம் நாளை வழக்கம் போல் இயங்கும்: நிர்வாகம் தகவல்

அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை செய்த தமிழ் பெண்! குவியும் பாராட்டுகள்!

அண்ணா பல்கலை மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: தவெக தலைவர் விஜய் அறிக்கை..!

ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது தவறு: காங்கிரஸ் சர்ச்சை கருத்து

நூல் அஞ்சல் சேவையை திடீரென நிறுத்திய அஞ்சல் துறை.. அதிர்ச்சியில் புத்தகப்பிரியர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments