Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாடம் படிக்காததால் தாய் அடித்து இறந்த குழந்தை விவகாரத்தில் திடீர் திருப்பம்!

Webdunia
புதன், 22 மே 2019 (07:18 IST)
பாடம் படிக்காமல் டிவி பார்த்து கொண்டிருந்த 5 வயது குழந்தையை தாய் அடித்ததால் நேற்று மரணம் அடைந்த குழந்தை குறித்த செய்தி ஊடகங்களில் பரபரப்பாக வெளிவந்தது. இந்த விவகாரத்தில் குழந்தையை தாய், தனது கள்ளக்காதலனுடன் அடித்தே கொலை செய்த அதிர்ச்சி தகவல் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது
 
நேற்று மரணம் அடைந்த குழந்தை பிரசன்னா-நித்யகமலா தம்பதிக்கு பிறந்த குழந்தை. நித்யகமலாவுக்கு அவருடைய உறவினர் முத்துப்பாண்டியன் என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. இந்த கள்ளக்காதலை அறிந்த பிரச்சன்னா நித்யகமலாவை குழந்தையுடன் விட்டுவிட்டு சென்றுவிட்டார். இதனையடுத்து நித்யகமலா, கள்ளக்காதலனுடன் நிரந்தரமாக உறவு வைக்க தொடங்கிவிட்டார். ஆனால் உறவினர்களின் தகாத பேச்சினால் கள்ளக்காதலனுடன் திருச்சி அருகே தொட்டியம் பகுதிக்குச் என்று அங்கு தாங்கள் கணவன், மனைவி என்று கூறி ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கினர்.
 
இந்த நிலையில் நித்யகமலாவுடன் அவருடைய குழந்தை எப்போதும் ஒட்டிக்கொண்டே இருந்ததால் தனது உறவுக்கு இடைஞ்சலாக இருப்பதை அறிந்த முத்துப்பாண்டியன், ஒரு கட்டத்தில் ஆத்திரமாகி குழந்தையை அடித்துள்ளார். நித்யகமலாவும் சேர்ந்து அடிக்க, குழந்தை படுகாயம் அடைந்து உயிருக்கு போராடியது. இதனையடுத்து குழந்தை படிக்காமல் டிவி பார்த்தால் அடித்ததாக அக்கம் பக்கத்தில் உள்ளவர்களையும் போலீசையும் நித்யகமலா நம்ப வைத்தார்.
 
ஆனால் இந்த சம்பவத்திற்கு பின் முத்துப்பாண்டி தலைமறைவானதால் சந்தேகம் அடைந்த போலீசார் நித்யகமலாவை தங்கள் பாணியில் விசாரித்ததில் முத்துப்பாண்டி தனது கணவர் இல்லை என்றும், கள்ளக்காதலர் என்றும், இருவரும் சேர்ந்துதான் குழந்தையை அடித்து கொலை செய்ததாகவும் கூறினார். இதனையடுத்து முத்துபாண்டியையும் நித்யகமலாவையும் கைது செய்த போலீசார் அவர்கள் இருவர் மீது கொலை வழக்கை பதிவு செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments