Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் ஒரே இரவில் 16 செ.மீ கொட்டித் தீர்த்த கனமழை... எந்த பகுதியில் தெரியுமா?

Webdunia
ஞாயிறு, 3 டிசம்பர் 2023 (09:12 IST)
சென்னையின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஒரே இரவில் 16 சென்டிமீட்டர் மழை கொட்டி உள்ளது. இதனால் அந்த பகுதியில் உள்ள மக்களுக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதுதான் மீனம்பாக்கம். 
 
வடகிழக்கு பருவமழை மற்றும் தென்கிழக்கு வங்க கடலில் தோன்றிய புயல் காரணமாக சென்னையில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
 
இந்த நிலையில் சென்னையில் உள்ள மீனம்பாக்கம் பகுதியில் நேற்று ஒரே இரவில் 16.7 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. ஆலந்தூரில் 9.7 சென்டிமீட்டர். கோடம்பாக்கம் மற்றும் ஐஸ் ஹவுஸ் பகுதியில் 7.1 சென்டிமீட்டர். அடையாறு பகுதியில் 6.9 சென்டிமீட்டர், தேனாம்பேட்டை பகுதியில் 6.3 சென்டிமீட்டர்  மழை பதிவாகியுள்ளது. 
 
இன்றும் சென்னை மாவட்டம் முழுவதும் கனமழை இருக்கும் என்று கூறப்படுவதால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். 
 
டிசம்பர் 6ஆம் தேதி புயல் கரையை கடக்கும் என்பதால் அதுவரை சென்னை உள்பட கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாலரை விட்டு வெளியேறினால்.. இந்தியா உள்பட பிரிக்ஸ் நாடுகளுக்கு டிரம்ப் எச்சரிக்கை..!

விழுப்புரம் மாவட்டத்தில் வரலாறு காணாத மழை.. மீட்பு பணிகள் தீவிரம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

அனைத்து பள்ளி, கல்லூரிகளும் முகாம்களாக மாற்றம்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

புயல் இன்னும் கரையை கடக்கவில்லை.. இன்று மாலை தான் கடக்கும்: தமிழ்நாடு வெதர்மேன்

சென்னையில் 3 சுரங்கப்பாதைகள் மூடல்.. போக்குவரத்தில் மாற்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments