Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மழைக்காலத்தில் மின்சார பாதுகாப்பு வழிமுறைகள்

electricity
, சனி, 2 டிசம்பர் 2023 (19:53 IST)
மிக்ஜாம் புயல் கரையை கடக்கும் நாளில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது  என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

எனவே மிக்ஜாம் புயல் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்திற்கு டிசம்பர் 5ஆம் தேதி ஆரஞ்ச் அலர்ட் விடுத்துள்ளது. அதன்படி, டிசம்பர் 4,5ஆம் தேதிகளில் சென்னை மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்  என வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது.

இந்த நிலையில், மழைக்காலங்களில் மேற்கொள்ள வேண்டிய மின்சார பாதுகாப்பு வழிமுறைகளை :

அதன்படி, மின் கம்பிகள் அறுந்து கிடக்கும் பகுதிகள், மின்சார கேபிள்கள் இருக்கும் பகுதிகளுக்கு அருகில் செல்வது தவிர்க்க வேண்டும்.

கைகள் ஈரத்துடன் இருக்கும்போது மின்சார சாதனங்கள், இயக்கவோ, சுவிட்சுகள் ஆன் செய்யவோ கூடாது.

வீடுகள், கட்டிடங்களில்  உள்ள ஈரப்பதமான சுவர்களில் கை வைப்பதை தவிர்க்க வேண்டும்.

தாழ்வாகத் தொங்கிக் கொண்டிருக்கும் மின்சார ஒயர்கள் அருகில் செல்வதை தவிர்க்க வேண்டும், அதைத் தொடுவதையும் தவிர்க்க வேண்டும்.

மின்சார கசிவுகளோ, மின் அதிர்ச்சி ஏற்படுமாயின் இதுபற்றி மின்வாரிய அலுவலகத்தை தொடர்புகொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இன்று பலத்த காற்றுடன் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புயல் காரணமாக அண்ணா பல்கலை தேர்வுகள் ஒத்திவைப்பு