Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கூடுதல் பேருந்து சேவை… ஒலிம்பியாட் போட்டியை காண சிறப்பு ஏற்பாடு!

Advertiesment
Chess Olympiad
, புதன், 27 ஜூலை 2022 (11:45 IST)
செஸ் ஒலிம்பியாட் போட்டியை காண பொதுமக்கள் செல்ல வசதியாக மாமல்லபுரத்திற்கு கூடுதலாக மாநகர பஸ்கள் இயக்கப்படுகின்றன.


உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி முதன்முறையாக தமிழ்நாட்டில் நடைபெறுகிறது. ஜூலை 28 ஆம் தேதி தொடங்கும் இந்த போட்டிகள் மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. இந்த விழாவின் தொடக்க நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ளார்.

செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்காக தமிழ்நாடே கோலாகலமாக தயாராகி வருகிறது. செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக ஏ.ஆர்.ரஹ்மான் தனி பாடல் வெளியிட்ட நிலையில், சென்னையில் உள்ள நேப்பியர் பாலம் செஸ் பலகை போல அலங்கரிக்கப்பட்டுள்ளது.

நாளை செஸ் ஒலிம்பியாட் தொடங்க உள்ள நிலையில் சென்னை முழுவதும் பல பகுதிகளில் செஸ் ஒலிம்பியாட் விளம்பரங்கள் இடம்பெற்றுள்ளன. சர்வதேச அளவில் நடைபெறும் இந்த போட்டியை பொதுமக்கள் டிக்கெட் பெற்று பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

போட்டியை காண பொதுமக்கள் செல்ல வசதியாக மாமல்லபுரத்திற்கு கூடுதலாக மாநகர பஸ்கள் இயக்கப்படுகின்றன. திருவான்மியூர், தாம்பரம் பஸ் நிலையங்களில் இருந்து அதிகளவில் பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் சனி, ஞாயிற்றுக்கிழமை வார இறுதி நாட்களில் சிறப்பு பஸ்கள் இயக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஏக்நாத் ஷிண்டேவை சந்தித்த உத்தவ் தாக்கரேவின் அண்ணன் மனைவி: பெரும் பரபரப்பு