Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் எழுச்சி பெறுமா?

Webdunia
வெள்ளி, 24 மே 2019 (08:45 IST)
தமிழகத்தை பொருத்தவரையில் தேசிய கட்சிகள் ஆட்சி அமைக்க வாய்ப்பே இல்லை என்றாலும் தமிழக மக்கள் திராவிட கட்சிகளுக்கு மாற்று கட்சியை கடந்த பல வருடங்களாக தேடி வருகின்றனர். ஆனால் புதிய கட்சிகள் மக்களின் நம்பிக்கையை பெற தவறி வருகின்றன. நாம் தமிழர், போன்ற ஒருசில புதிய கட்சிகள் தமிழகத்தில் காலூன்ற கடந்த சில ஆண்டுகளாக முயற்சித்தபோதிலும் தேர்தல் அரசியலில் வெற்றி காண முடியவில்லை
 
இந்த நிலையில் திமுக, அதிமுகவுக்கு மாற்றாக கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியை மக்கள் பார்த்தனர். குறிப்பாக கமல்ஹாசனின் பிரச்சாரத்தில் இளைஞர்கள், மாணவர்கள் கவரப்பட்டனர். இந்த தேர்தலிலும் கடைசி நேரத்தில் இந்து குறித்த சர்ச்சைக்குரிய பேச்சை அவர் பேசாமல் இருந்திருந்தால் அவரது கட்சியினர்களுக்கு இன்னும் அதிக வாக்குகள் கிடைத்திருக்க வாய்ப்பு இருந்துள்ளது
 
இருப்பினும் மநீம கட்சியின் வேட்பாளர்கள் ஒருசில தொகுதிகளில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளனர். குறிப்பாக கோயம்புத்தூர் தொகுதியில்
R மகேந்திரன் 1,44,808 வாக்குகளும், ஶ்ரீபெரும்புதூர் தொகுதியில் ஶ்ரீதர் 1,35,525 வாக்குகளும், தென்சென்னை தொகுதியில் R.ரங்கராஜன் 1,35,465 வாக்குகளும், வடசென்னை தொகுதியில் மெளரியா 1,03,167 வாக்குகளும், மத்தியசென்னை தொகுதியில் கமீலாநாசர் 92,249 வாக்குகளும் பெற்றுள்ளனர்.                              
 

இதே போன்று மக்கள் நீதி மய்யம், திராவிட கட்சிகளுடன் கூட்டணி அமைக்காமல் தனி பாதையில் சென்றால் 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் கணிசமான எம்.எல்.ஏக்களை உருவாக்க வாய்ப்பு இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments