Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இப்போதாவது ஞானோதயம் வந்ததே! – பொதுத்தேர்வு ரத்து குறித்து ஸ்டாலின் அறிக்கை!

Webdunia
புதன், 5 பிப்ரவரி 2020 (10:15 IST)
தமிழகத்தில் பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் மு.க.ஸ்டாலின்.

தமிழகத்தில் 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவதாக அறிவித்திருந்த நிலையில் தற்போது அந்த முடிவை அரசு கைவிட்டுள்ளது. பழைய முறைப்படியே இனி தேர்வுகள் நடக்கும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் உறுதி அளித்துள்ளார். தமிழக அரசின் இந்த முடிவை பல்வேறு கட்சிகளும் பாராட்டி நன்றி தெரிவித்து வரும் நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் ”இந்த பொதுத்தேர்வுக்கு எதிராக ஆரம்பம் முதலே திமுக போராடி வருகிறது. தற்போது திடீர் ஞானோதயம் ஏற்பட்டது போல தேர்வை ரத்து செய்துள்ளார்கள். இந்த நிலைப்பாட்டிலாவது தொடர்ந்து நீடித்து புதிய கல்வி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்” என கூறியுள்ளார்.

அறிக்கையில் தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கு பாராட்டோ, நன்றியோ இல்லாவிட்டாலும் ஆதரவு தெரிவிக்கும் தோனியில் கூட இல்லாமல் மு.க.ஸ்டாலின் பேசியிருப்பது கண்டு அதிமுகவினர் கடுப்பாகி இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசிக்கொள்ளப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கும்பமேளாவுக்கு இஸ்லாமியர்களும் வரலாம்.. ஆனால்..? - யோகி ஆதித்யநாத் விடுத்த எச்சரிக்கை!

3ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு மாரடைப்பு?? பள்ளியிலேயே பலியான சோகம்!

பாஜகவை நோக்கி சுட்டு விரலை நீட்டுவாரா விஜய்? நீட் விவகாரம் குறித்து திமுக கேள்வி..!

அமைச்சர் சேகர்பாபுவை பார்த்தால் பரிதாபம்தான் வருகிறது: அண்ணாமலை

திருமணம் செய்ய வற்புறுத்திய பெண் கொலை.. 8 மாதங்களாக பிணத்தை பிரிட்ஜில் வைத்த நபர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments