Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருவாரூர் பூர்வீக வீட்டில் இருந்து பிரச்சாரத்தை தொடங்கிய மு.க.ஸ்டாலின்

Webdunia
புதன், 20 மார்ச் 2019 (07:41 IST)
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க அனைத்து பணிகளையும் வெற்றிகரமாக முடித்துவிட்டு இன்று முதல் பிரச்சாரத்தையும் தொடங்கிவிட்டார். இன்று தனது தந்தையும் முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதியின் பிறந்த ஊரான திருவாரூரில் இருந்து சற்றுமுன் பிரச்சாரத்தை அவர் தொடங்கியுள்ளார்.
 
மக்களவை தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தல் தேர்தல் பிரச்சாரத்தை மு.க.ஸ்டாலின் திருவாரூர் சன்னதி தெருவில் உள்ள தனது பூர்வீக வீட்டில் இருந்து தொடங்கியுள்ளார். முதல்கட்டமாக திருவாரூர் இடைத்தேர்தல் வேட்பாளர் பூண்டி கலைவாணனுக்கு ஆதரவாக ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். அவருக்கு வழிநெடுகிலும் மக்கள் அமோக ஆதரவு அளித்து வருகின்றனர்.
 
இன்று மதியம் வரை திருவாரூர் சட்டமன்ற திமுக வேட்பாளருக்கு வாக்கு சேகரிக்கும் மு.க. ஸ்டாலின் மாலை மற்றும் இரவில் தஞ்சை பாராளுமன்ற திமுக வேட்பாளருக்கு ஓட்டு சேகரிக்கவுள்ளர். நாளை அவர் பெரம்பலூரில் பிரச்சாரம் செய்யவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டி..! சகோதரிக்கு ஆதரவளிக்க வேண்டும்.! ராகுல் காந்தி..!!

முதல்வர் முக ஸ்டாலின் வெட்கித் தலைகுனிய வேண்டும்: பெண் காவலர் அரிவாள் வெட்டு குறித்து ஈபிஎஸ்..!

முட்டைகளை ஏற்றி சென்ற கண்டெய்னர் லாரி விபத்து.. சாலையில் சிதறிய லட்சக்கணக்கான முட்டைகள்..!

ஜெயங்கொண்டம் அருகே குழந்தையை தண்ணீரில் அமுக்கிக் கொன்ற தாத்தா… மூட நம்பிக்கையால் நடந்த கொடூரம்!

பெண் காவலருக்கு அரிவாள் வெட்டு..! பட்டப்பகலில் நடந்த பயங்கரம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments