Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரளாவில் பொங்கலுக்கு லீவ் இல்லையா... ஸ்டாலின் வருத்தம்!

Webdunia
வியாழன், 13 ஜனவரி 2022 (12:30 IST)
கேரளாவில் தமிழ் பேசும் மக்கள் அதிகம் வாழும் 6 மாவட்டங்களுக்கு ஜனவரி 14 ஆம் தேதி விடுமுறை அறிவிக்க கோரிக்கை. 

 
பொங்கல் என்பது தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு அறுவடைப் பண்டிகை ஆகும். பொங்கல், உழைக்கும் மக்கள் இயற்கைத் தெய்வமாகக் கருதப்படும் சூரியனுக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாகக் கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகை இந்து கடவுளான சூரிய தேவனுக்கும் இயற்கைக்கும் அர்ப்பணிக்கப்பட்டது.
 
இந்நிலையில் கேரளாவில் பொங்கலுக்கு விடுமுறை இல்லை போலும். எனவே இது குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, தை மாதம் முதல் நாளுக்கு (ஜனவரி 14) பதிலாக தை மாதம் இரண்டாம் நாளான, ஜனவரி 15 மலையாள மாதமான மகரம் முதல் நாளுக்கு வட்டார விடுமுறை அறிவித்துள்ளது கேரளா.
 
தை முதல் நாளுக்கு விடுமுறை அளிக்காத இந்த அறிவிப்பு கேரளத் தமிழர்களுக்கு பெரும் கவலையை அளித்துள்ளது. எனவே கேரளாவில் தமிழ் பேசும் மக்கள் அதிகம் வாழும் 6 மாவட்டங்களுக்கு ஜனவரி 14 ஆம் தேதி விடுமுறை அறிவிக்க கோரிக்கை வைத்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசியலில் நம்பிக்கை முக்கியம்.. சொன்ன வார்த்தையை காப்பாற்ற வேண்டும்: பிரேமலதா

மாணவர்களுக்கு தங்க காசு, வைர மோதிரம்.. கோலாகலமாக நாளை விஜய் விழா..!

திமுக எதிர்க்கட்சியாக கூட வராது: பிரபல அரசியல் விமர்சகர் கணிப்பு..!

விஜய் செல்லும் இடத்திற்கு முன்கூட்டியே செல்லும் திமுக.. அவ்வளவு பயமா?

அன்புமணியை அமைச்சராக்கி தவறு செய்து விட்டேன்! - ராமதாஸ் பேச்சால் பாமக அதிர்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments