Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மருத்துவ தரவரிசை பட்டியலில் பிற மாநில மாணவர்கள்!? – மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

Webdunia
புதன், 18 நவம்பர் 2020 (12:31 IST)
தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு கூட்டம் இன்று தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் வெளிமாநில மாணவர்களின் பெயர்கள் பட்டியலில் உள்ளதாக மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழகத்தில் மருத்துவ படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில் இன்று மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு கூட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார். இதற்கான மாணவர்கள் தரவரிசை பட்டியலை முன்னதாக அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் தமிழக அரசு வெளியிட்டுள்ள தரவரிசை பட்டியலில் பிற மாநில மாணவர்கள் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர் “தமிழக அரசு வெளியிட்டுள்ள தமிழக மாணவர்களுக்கான தரவரிசைப்பட்டியலில் பிற மாநில மாணவர்கள் பெயர் இடம்பெற்றுள்ளது. ஒரே நேரத்தில் பிற மாநில பட்டியலிலும், தமிழக பட்டியலிலும் ஒரே மாணவரின் பெயர் எப்படி இடம்பெற முடியும்?” என கேள்வியெழுப்பியுள்ளார்.

மேலும் தரவரிசை பட்டியல் தயாரிப்பதில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றம் சாட்டியுள்ள அவர். பட்டியலை திருத்தி மீண்டும் வெளியிட வேண்டும் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தெலுங்கை எங்க மேல திணிக்கிறாங்க.. தெலுங்கானா மாணவர்கள் போராட்டம்!

இன்றிரவு 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மத்திய அரசு அதிக நிதியை ஒதுக்கியும் சிலர் அழுது கொண்டே இருக்கிறார்கள்: பிரதமர் மோடி

பிரதமர் மோடியின் இலங்கை பயணம்.. சில நிமிடங்களில் 14 தமிழக மீனவர்கள் விடுதலை..!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பா?

அடுத்த கட்டுரையில்
Show comments