Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நம்பிக்கையை நிறைவேற்றுவேன்: ஏ. ஆர் ரஹ்மானுக்கு முக ஸ்டாலின் பதில்!

Advertiesment
நம்பிக்கையை நிறைவேற்றுவேன்: ஏ. ஆர் ரஹ்மானுக்கு முக ஸ்டாலின் பதில்!
, திங்கள், 3 மே 2021 (13:06 IST)
தமிழக சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மை வெற்றி பெற்ற திமுக விரைவில் ஆட்சியமைக்க உள்ளது. திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நாளை நடைபெறும் நிலையில் கவர்னர் மாளிகையில் விரைவில் மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவி பிரமாணம் ஏற்க உள்ளதாக கூறப்படுகிறது.
 
மு.க.ஸ்டாலினுக்கு பல அரசியல் கட்சி தலைவர்கள் பிரபலங்கள் உள்ளிட்டோர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில், "சமூக நீதி, கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் தமிழ்நாடு வரலாறு காணாத வளர்ச்சியடைய,  இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு ஓர் எடுத்துக்காட்டாய்த் திகழ, தி.மு.க கூட்டணிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள் என பதிவிட்டிருந்தார். 
 
அதற்கு பதில் அளித்துள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இசைப்புயல் - ஆஸ்கர் விருதாளரான தங்களின் வாழ்த்துகளுக்கு நெஞ்சார்ந்த நன்றி.  தமிழக மக்கள் சார்பில் தாங்கள் வைத்துள்ள நம்பிக்கையை நிறைவேற்றிடும் வகையில் புதிய அரசு செயல்படும் என உறுதியளித்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

”நமஸ்தே”னு டைப் பண்ணுங்க.. தடுப்பூசி மையங்களை கண்டறிய வாட்ஸப் எண்!