Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்டாலினுக்கு கண் பார்வை இல்லை!? – அமைச்சர் ஜெயக்குமார் காட்டம்!

Webdunia
புதன், 30 அக்டோபர் 2019 (15:22 IST)
குழந்தை சுஜித் மீட்பு சம்பவத்தில் அதிமுக சரியாக செயல்படவில்லை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதற்கு பதிலளித்துள்ளார் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார்.

மணப்பாறை அருகே நடுகாட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் சிக்கி கொண்ட குழந்தை சுஜித்தை மீட்க 4 நாட்களாக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. ஆனாலும் குழந்தை சுஜித் இறந்த நிலையிலேயே மீட்கப்பட்டது பலருக்கு வேதனையை உண்டாக்கியது. சுஜித்தின் பெற்றோருக்கு அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் நிதியுதவி அளித்து ஆறுதல் சொன்னார்கள்.

இந்நிலையில் குழந்தை சுஜித் மீட்பு பணியில் அரசு சரியாக செயல்படவில்லை என ஸ்டாலின் குற்றம் சாட்டினார். இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் ”குழந்தை சுஜித்தை காப்பாற்ற அரசு செய்த முயற்சிகள் அனைத்தையும் மக்கள் பார்த்துக் கொண்டே இருந்தார்கள். குழந்தை மீட்பு சம்பவத்தில் அரசு செயல்பட்ட விதத்தை அனைவருமே பாராட்டி வரும் நிலையில், ஸ்டாலின் மட்டும் குறை கூறுகிறார் என்றால் அவர் கண்ணில் பார்வை இல்லை என்றுதான் கூறவேண்டும்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் CBSE பள்ளி நடத்துகிறார்.. அமைச்சர் மகன் ப்ரெஞ்சு படிக்கிறார்! அரசு பள்ளிகளுக்கு ஏன் வஞ்சனை? - அண்ணாமலை ஆவேசம்!

ஒன்னுக் கூட ஒரிஜினல் இல்லையா? சோப்பு நுரையை பனி என காட்டி ஏமாற்றிய சீனா!

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments