Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மண்புழு போல் ஊர்ந்து செல்பவன் அல்ல நான்! – எடப்பாடியாரை விளாசிய ஸ்டாலின்!

Webdunia
ஞாயிறு, 1 டிசம்பர் 2019 (14:43 IST)
தான் மண்புழு போல ஊர்ந்து சென்று பதவிகளை பெறுவது இல்லை என மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

சமீபத்தில் வார இதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி தானும், ஸ்டாலினும் ஒரே சமயத்தில் அரசியலுக்கு வந்ததாகவும், ஸ்டாலின் போல் குடும்ப அரசியலால் பதவிகள் பெறாமல், தான் கஷ்டப்பட்டு முதல்வர் பதவியை அடைந்ததாகவும் கூறியிருந்தார்.

எடப்பாடியாரின் கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பேசிய மு.க.ஸ்டாலின் “மண்புழு போல ஊர்ந்து சென்று முதல்வர் பதவியில் அமர எனக்கு விருப்பமில்லை. அப்படி ஒரு பதவியே தேவையில்லை. நான் 1989க்கு முன்பிருந்தே அரசியலில் இருக்கிறேன். அப்போதெல்லாம் எடப்பாடி பழனிசாமி எங்கிருந்தார். நான் மாணவனாக இருந்த போதே அரசியலில் இறங்கியவன்” என பேசியுள்ளார்.

முதல்வருக்கும், எதிர்க்கட்சி தலைவருக்கும் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டுள்ள இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாலியல் வன்கொடுமை, கொலை செய்பவர்களுக்கு மரண தண்டனை: டொனால்ட் டிரம்ப்..!

சபரிமலையில் நாளை மண்டல பூஜை: பக்தர்களுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள்..!

இன்று வலுவிழக்கிறது காற்றழுத்த தாழ்வு பகுதி ; தென் மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை..!

தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொள்ள தயார்: டி.டி.வி.தினகரன் அதிரடி அறிவிப்பு..!

70 வயது மூதாட்டி பாலியல் பலாத்காரம்.. ஜாமீன் பெற்று மீண்டும் அதே மூதாட்டிக்கு பாலியல் தொல்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments