Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடைபாவாடை விரிப்பதை நிறுத்துங்கள்: அதிமுகவுக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்

Webdunia
திங்கள், 20 ஜனவரி 2020 (14:26 IST)
தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் சோதனை குழாய்கள் அமைக்க யார் உத்தரவும் தேவையில்லை என்ற மத்திய அரசின் முடிவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுமாறு முக ஸ்டாலின் அறிக்கை விடுத்துள்ளார்.

சமீபத்தில் மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் சோதனை குழாய்கள் அமைக்க மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அனுமதியோ, மக்களின் கருத்துகளோ தேவையில்லை என கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புக்கு எதிராக விவாசாயிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தை சகாரா பாலைவனம் ஆக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு எப்படியாவது புகுத்தி விட முயற்சிப்பதாகவும், அதிமுக அரசு மத்திய அரசின் அனைத்து செயல்பாடுகளுக்கு நடைபாவாடை விரிப்பதை நிறுத்தி விட்டு இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ஆர்.எஸ்.எஸ். அழைத்தால் சென்றுவிடுவேன்: ஓய்வு பெறும் நாளில் பேசிய உயர் நீதிமன்ற நீதிபதி!

நாளை உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.. இன்று முதல் 26ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு..!

இலங்கை சீதை கோயிலில் மகா கும்பாபிஷேகம்: இந்தியாவிலிருந்து சென்ற சீர்வரிசைகள்..!

ஜூன் 4ஆம் தேதிக்கு பின் ராகுல் காந்தி ஒரு யாத்திரைக்கு செல்வார்.. அமித்ஷா கிண்டல்..!

ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு: பாஜகவின் 2 பிரபலங்கள் ஆஜராக சிபிசிஐடி சம்மன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments