Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வெட்டி பந்தாவுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல... எடப்பாடியை விளாசிய ஸ்டாலின்!

வெட்டி பந்தாவுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல... எடப்பாடியை விளாசிய ஸ்டாலின்!
, வெள்ளி, 4 அக்டோபர் 2019 (12:11 IST)
வெட்டி பந்தாக்களிலும், போலி கவுரவங்களிலும் காலம் கடத்த நினைப்பதைத் தவிர முதல்வரின் செயல்பாடுகளில் சொல்லி கொள்வது மாதிரி எதுவும் இல்லை என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
 
பேனர் காரணமாக சென்னையைச் சேர்ந்த சுபஸ்ரீ மரணமடைந்து ஒரு மாதம் கூட முடியாத நிலையில் மீண்டும் பேனர் வைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு சென்று அனுமதி வாங்கி உள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. 
 
இந்நிலையில், இது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். ஸ்டாலின் இது குறித்து கூறியுள்ளதாவது, அங்கீகாரம் இல்லாமல் பேனர் வைத்து அப்பாவிப் பெண் சுபஸ்ரீ உயிரிழப்புக்குக் காரணமான அதிமுக கட்சி, அந்த உயிருக்கு ஒரு அனுதாபச் செய்தி கூட தரவில்லை. 
webdunia
அந்த மரணக் குழியின் ஈரம் காயும் முன், அடுத்த கட் அவுட்டுக்கு அனுமதி வாங்க உயர்நீதிமன்றத்துக்கு ஓடி இருக்கிறார் முதல்வர் எடப்பாடி. இந்த வேகத்தையும் அக்கறையையும், மக்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் காட்டியிருந்தால் பாராட்டலாம். 
 
வெட்டி பந்தாக்களிலும், போலி கவுரவங்களிலும் காலம் கடத்த நினைப்பதைத் தவிர, முதல்வரின் செயல்பாடுகளில் சொல்லிக் கொள்வது மாதிரி எந்த சாதனையும் இல்லை என தெரிவித்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை: வெற்றி பெருமா அதிமுக?