Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எடப்பாடி மைனாரிட்டி ஆட்சியை கவிழ்க்க புது கணக்கு போட்ட ஸ்டாலின்

Webdunia
புதன், 8 மே 2019 (14:42 IST)
எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தமிழகத்தில் நடந்து வரும் ஆட்சி தேர்தல் முடிவுக்கு பிறகு என்னவாகும் என ஸ்டாலின் பிரச்சாரத்தில் தெரிவித்துள்ளார். 
 
வரும் 19 ஆம் தேதி மீதமுள்ள 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரவக்குறிச்சி தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியை ஆதரித்து அங்கு ஸ்டாலின் பிரசாரம் செய்தார். பிரச்சாரத்தின் போது ஆட்சி மாற்றம் எப்படி ஏற்படும் என கணக்கு போட்டு மக்களுக்கு சொல்லு புரியவைத்தார். 
 
ஸ்டாலின் பேசியதாவது, தமிழகத்தில் 23 ஆம் தேதி வாக்குகள் எண்ணும் போது எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு போவது உறுதி செய்யப்படும். தமிழகத்தில் இன்னும் ஒன்றேமுக்கால் ஆண்டு ஆட்சி இருக்கிறது. பின் எப்படி வீட்டுக்கு போக முடியும் என்று ஒரு கேள்வி எழலாம். 
எடப்பாடி தலைமையில் நடைபெறும் இந்த ஆட்சி மெஜாரிட்டி இல்லாத நிலையில் மைனாரிட்டியாக நடைபெறும் ஆட்சிதான். நடந்து முடிந்த 18 சட்டமன்ற இடைத்தேர்தலிலும், இனி நடைபெற இருக்கிற 4 சட்டமன்றத் தேர்தலிலும் திமுக வெர்றி பெறும். 
 
ஏற்கனவே திமுக கூட்டணியில் 97 பேர் இருக்கிறோம். தற்போது வெற்றி பெற்று 119 பேராக வந்துவிடும். இதனால் 23 ஆம் தேதிக்கு பிறகு திமுகவின் ஆட்சி அமையும் என பேசினார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments