Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லாரி டயர்னு நினைச்சி எடுத்தோம்..! – போர் விமானத்தின் டயர் மீட்பு!

Webdunia
ஞாயிறு, 5 டிசம்பர் 2021 (15:43 IST)
சமீபத்தில் உத்தர பிரதேசத்தில் போர் விமானத்தின் டயர் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அது போலீஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஜோத்பூரில் உள்ள ராணுவ விமானப்படை தளத்தில் மீரஜ் உள்ளிட்ட ராணுவ விமானங்கள் பல உள்ளன. இவற்றிற்கு தேவையான உதிரி பாகங்கள், டயர்கள் உள்ளிட்ட பொருட்கள் அவ்வபோது அனுப்பி வைக்கப்படுகின்றன. அவ்வாறாக லக்னோ விமானப்படை தளத்தில் இருந்து ஜோத்பூர் விமானப்படை தளத்திற்கு தேவையான தளவாடங்கள் ராணுவ வாகனத்தில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

ஆனால் அந்த வாகனத்தில் இருந்து மீரஜ் ரக போர்விமானங்களில் பயன்படுத்தப்படும் டயர்களை மட்டும் மர்ம கும்பல் திருடியுள்ளது. இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் பக்‌ஷி தலாப் விமானப்படை தளத்தில் காணாமல் போன டயருடன் வந்த இருவரை போலீஸார் பிடித்துள்ளனர். அவர்களிடம் விசாரித்தபோது திருட்டு சம்பவம் நடந்ததாக கூறப்படும் சாலையில் இந்த டயர்களை கண்டதாகவும், லாரி டயர் என நினைத்து எடுத்து சென்றதாகவும் கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Farewell மேடையில் பேசும்போது மாரடைப்பு! 20 வயது பெண் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

அந்த தியாகி யார்? உங்களால் ஏமாற்றப்பட்ட ஓபிஎஸ்ஸும், தினகரனும்தான்! - எடப்பாடியாருக்கு அமைச்சர் பதில்!

அதிபர் டிரம்புக்கு எதிராக வெடித்தது மக்கள் போராட்டம்.. பதவி விலக வலியுறுத்தி முழக்கம்..!

சிலிண்டர் விலை உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும்: செல்வப்பெருந்தகை..!

திடீர் திருப்பம்.. வக்பு வாரிய திருத்த மசோதாவை முதல் ஆளாக ஏற்று கொண்ட கேரளா..!

அடுத்த கட்டுரையில்
Show comments