Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சரத்குமாரை வரவேற்ற தமிழக போக்குவரத்து துறை அமைச்சர்!

Advertiesment
சரத்குமாரை வரவேற்ற தமிழக போக்குவரத்து துறை அமைச்சர்!
, சனி, 24 மார்ச் 2018 (18:57 IST)
தமிழகத்தை பொறுத்தவரை, தற்போது விஸ்வரூபமெடுத்துள்ளது காவிரி மேலாண்மை வாரியம் பிரச்சினை தான், அதில், தற்போது உள்ள ஆளுகின்ற எடப்பாடி பழனிச்சாமியின் அ.தி.மு.க எம்.எல்.ஏ மற்றும அமைச்சர்கள் மட்டும் தான் புலி வருது கதையாக இருப்பதாக ஆங்காங்கே பேட்டி தந்து வருகின்றனர். விரைவில் மேலாண்மை வாரியம் அமைப்போம், அதற்காக பாடுபடுவோம் என்று கூறி வரும் நிலையில், பல்வேறு கட்சிகள் பல கட்ட போராட்டங்களையும், ஆர்பாட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.


இந்த நிலையில், இன்று திரைப்பட நடிகரும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரும், பொதுச்செயலாளருமான சரத்குமார் மேட்டூரில் தொடங்கி கரூர் வழியாக மயிலாடுதுறைக்கு பேரணியாக செல்லும் நிலையில் இன்று அதற்கான பேரணி கரூர் வழியாக சென்றார்.

அப்போது லைட் ஹவுஸ் கார்னர் பகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ள செல்லும் போது, அதே வழியாக, தமிழக போக்குவரத்து துறை அமைச்சரும், கரூர் மாவட்ட செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர், தண்ணீர் பந்தல், நீர்மோர் பந்தல் திறக்க செல்லும் போது, இருவரும் திடீரென்று சந்தித்து கொண்டதோடு, நலம் விசாரித்துக் கொண்டனர். அப்போது, சால்வை அணிவித்தும் அமைச்சர் சரத்குமாரை கெளரவித்தார்.



இந்த சந்திப்பின் பின்னணியில் கூட்டணியா ? என்றும், வரும் உள்ளாட்சி தேர்தல், நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணியா என்று ஒரு தனியார் செய்தி நிறுவனம்  கேட்டதற்கு, இந்த ஆட்சிக்கு நான் விரோதி அல்ல, மரியாதை நிமித்தமாகவே சந்தித்ததாகவும் கூறினார். ஆனால், இந்த சந்திப்பின் ரகசியம் குறித்து சரத்குமார் கட்சி மற்றும் எடப்பாடி பழனிச்சாமியின் அ.தி.மு.க வினரிடையே புரியாத புதிராக உள்ளதாகவும் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஆனால் நாளை (25-03-18), தஞ்சையில் நடைபெறும், அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் சார்பில் டி.டி.வி தினகரன் நடத்தும் காவிரி மேலாண்மை வாரியத்திற்கான உண்ணாவிரதத்திற்கு ஆதரவையும் அதே நேரத்தில் சரத்குமார் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


சி.ஆனந்தகுமார் – செய்தியாளர் – கரூர்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மோடி வெளிநாடு பயணங்களில் பிஸியாக இருப்பதினால் காவிரியை கண்டு கொள்ளவில்லையா?: சரத்குமார் கேள்வி