Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இளையராஜா மகள் பவதாரிணி மறைவு: அமைச்சர் உதயநிதி இரங்கல்..!

Mahendran
வெள்ளி, 26 ஜனவரி 2024 (10:18 IST)
இசைஞானி இளையராஜாவின் மகள் பாடகி பவதாரிணி நேற்று மாலை காலமான நிலையில் அவரது மறைவிற்கு அமைச்சர் உதயநிதி மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் தங்களது சமூக வலைதளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
 
அமைச்சர் உதயநிதி தனது இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:
 
இசைஞானி இளையராஜா அவர்களின் அன்பு மகள்  பின்னணி பாடகி சகோதரி பவதாரணி, உடல் நலக்குறைவால் மரணமடைந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன்.
 
தனித்தன்மையுடன் கூடிய குரலால் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருந்த அவரது மரணம், தமிழ் இசை உலகிற்கு பேரிழப்பாகும்.
 
அவருடைய மரணத்துக்கு என் ஆழ்ந்த இரங்கல். 
 
பவதாரணியை இழந்து வாடும் இசைஞானி இளையராஜா சார், சகோதரர்கள் கார்த்திக்ராஜா, யுவன் சங்கர் ராஜா உள்ளிட்ட அவருடைய குடும்பத்தார் - நண்பர்களுக்கு என்னுடைய ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்.
 
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சர் ஆகிறார் ரேகா குப்தா.. இன்று பதவியேற்பு..!

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments