Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க திட்டம்! – அமைச்சர் செந்தில்பாலாஜி!

Webdunia
புதன், 12 அக்டோபர் 2022 (08:53 IST)
மின்சாரம் முறைகேடாக பயன்படுத்தப்படுவதை தடுக்க மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைக்க திட்டமிடப்படுவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சராக செந்தில்பாலாஜி இருந்து வருகிறார். கடந்த சில காலமாக மின்பயன்பாடு அளவீடில் குளறுபடி, அதிகமான மின்கட்டணம் செலுத்து நிர்பந்திக்கப்படுவது போன்றவை மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ALSO READ: பண்டிகை காலம்.. செம கூட்டம்.. செம வசூல்..! – ரயில்வே-க்கு உயர்ந்த வருவாய்!

சமீபத்தில் மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மின் கணக்கீடு குளறுபடிகள் மற்றும் முறைகேடாக மின்சாரம் பயன்படுத்துதல் குறித்து பேசியுள்ள அமைச்சர் செந்தில்பாலாஜி “கடந்த ஆண்டு 1.50 கோடி பயனாளர்களின் தொடர்பு எண் மின்வாரியத்திடம் இருந்தது. இது தற்போது மூன்று கோடியாக உயர்ந்துள்ளது. முறைகேடாக மின்சாரம் பயன்படுத்தப்படுவதை தடுக்க மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைப்பதின் மூலம் தீர்வு காண முடியும்” என தெரிவித்துள்ளார்.

Edited By: Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடமுழக்கிற்கு பின் திருப்பதிக்கு இணையாக திருச்செந்தூர் மாறும்: அமைச்சர் சேகர்பாபு..!

எடப்பாடி பழனிசாமிக்கு ஏதோ ஒரு நெருக்கடி.. அமித்ஷா உடனான சந்திப்பு குறித்து முத்தரசன் கருத்து

தி.மு.க.,வை வீழ்த்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்; பா.ஜ.,வுடன் கூட்டணி குறித்து ஈபிஎஸ்

இந்துக்கள் பாதுகாப்பாக இருக்கும் வரை முஸ்லிம்கள் பாதுகாப்பாக இருக்க முடியும்: யோகி ஆதித்யநாத்

நகராட்சியில் இருந்து மாநகராட்சியாக உயர்த்தப்படும் புதுச்சேரி: முதல்வர் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments