Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் இன்று தீர்ப்பு..!

Webdunia
செவ்வாய், 16 மே 2023 (08:01 IST)
கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் இன்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளிக்க உள்ளதாக தகவல் வெளியானது.

கடந்த 2011 முதல் 2015 ஆம் ஆண்டு வரை நடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்ததாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் பணம் கிடைத்து விட்டதால் சமரசமாக செல்ல விரும்புவதாக தெரிவித்த நிலையில் செந்தில் பாலாஜி மீதான வழக்கை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால் இந்த தீர்ப்புக்கு எதிராக ஊழல் தடுப்பு அமைப்பு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் கடந்த சில மாதங்களாக விசாரணை செய்யப்பட்ட நிலையில் இரு தரப்பு வாதங்கள் முடிந்து இன்று தீர்ப்பு அளிக்கப்பட உள்ளது.

சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கிருஷ்ண முராரி, ராமசப்பிரமணியம் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பளிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணாமலைக்கு பதிலா எம்.எஸ்.பாஸ்கர்தான் பாஜக தலைவரா இருக்கணும்! - கலாய்த்த எஸ்.வி.சேகர்!

எப்.ஐ.ஆரை கசிய விட்டது யார்? சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு விளக்கம்..!

சென்னைக்கு கடைசி சுற்று மழை எப்போது? தமிழ்நாடு வெதர்மேன் அளித்த தகவல்..!

சமூக விரோதிகளை அடித்து துவைக்க வேண்டிய தலைவன்.. தன்னையே அடித்துக் கொள்வதா? - நடிகை கஸ்தூரி வேதனை!

கேப்டனின் முதலாம் ஆண்டு நினைவு நாள்! நடிகர் விஜய்க்கு நேரில் அழைப்பு விடுத்த விஜயபிரபாகரன்!

அடுத்த கட்டுரையில்
Show comments