Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வைகோ கேட்பதற்காக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்தாகுமா?

Webdunia
புதன், 8 ஏப்ரல் 2020 (10:55 IST)
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்தாகுமா என்பது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளித்துள்ளார். 

 
கொரோனா காரணமாக தமிழகத்தில் அனைத்து தொழில்களும், தொழிலாளர்களும் வீட்டுக்குள் முடங்கியுள்ளனர். கல்வி நிலையங்களுக்கு அரசு விடுமுறை அளித்துள்ளது. இதனால் தேர்வு நடத்த முடியாத சூழ்நிலை உருவானதால் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அரசு அறிவித்தது. 
 
இந்நிலையில் இன்னும் நடத்து முடிக்கப்படாமல் இருக்கும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடக்குமா என கேள்வி எழுந்துள்ளது. நேற்று வைகோ பொதுத்தேர்வை ரத்து செய்யும் படி அறிவுறுத்தி இருந்தார். இந்நிலையில் இது குறித்து பதில் அளித்துள்ளார் அமைச்சர் செங்கோட்டையன், 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை வைகோ ரத்துசெய்யக் கோரியது தொடர்பாக முதல்வர்தான் முடிவு செய்ய வேண்டும் என கூறியுள்ளார். 
 
இதற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முன்னரே, சூழ்நிலையை பொறுத்தே 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து முடிவெடுக்க முடியும் என தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பஞ்சாப் ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களுடன் அரவிந்த் கெஜ்ரிவால் அவசர ஆலோசனை.. முதல்வர் ஆகிறாரா?

இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது டெஸ்லா கார்.. விலை எவ்வளவு தெரியுமா?

டெல்லி முதலமைச்சர் ஆகிறார் ரேகா குப்தா.. இன்று பதவியேற்பு..!

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments