14 மாதக் குழந்தை கொரோனாவல் பலி! அதிர்ச்சியளிக்கும் செய்தி!

Webdunia
புதன், 8 ஏப்ரல் 2020 (10:49 IST)
குஜராத்தில் கொரோனவால் பாதிக்கப்பட்ட 14 மாத குழந்தை ஒன்று பலியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் ராம்நகரில் கடந்த ஏப்ரல் 5 ஆம் தேதி குஜராத்தைச் சேர்ந்த 14 மாதக் குழந்தை ஒன்றுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. குழந்தைக்கு கடந்த 2 நாட்களாக வெண்டிலேட்டர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று அந்த குழந்தை இறந்துள்ளது.

இறந்த குழந்தையின் பெற்றொர் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் ராம்நகரில் உள்ள துறைமுக  தொழிற்சாலைகளில் வேலை செய்துவந்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது. இந்த சம்பவமானது இந்திய மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் தற்போதைய நிலவரப்படி 5351 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 160 ஆக உயர்ந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தீபாவளி கொண்டாட வந்த மாமியாரை அடித்தே கொலை செய்த மருமகன்: என்ன காரணம்?

பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் இணைய கேரள அரசு முடிவு.. தமிழ்நாடு என்ன செய்ய போகிறது?

தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை: வங்கக் கடல் தாழ்வுப் பகுதியால் மூன்று நாட்களுக்கு மழை தொடரும்!

பாகிஸ்தானில் தொடர் குண்டு வெடிப்பு: 3 போலீசார் பலி, எஸ்.பி. படுகாயம்

2026 தேர்தலில் விஜய் வெற்றி பெறுவாரா? வைகோவின் கணிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments